திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பத்மகுமாரை காப்பாற்ற அரசு முயல்வதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, ‘‘சபரிமலை கோயில் விவகாரத்தில் இப்போது நான் பேசுவது சரியல்ல. இந்த வழக்கில் சிக்கியுள்ள யாரையும் கேரள அரசு காப்பாற்ற முயலவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.