புதுடெல்லி: கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “கோவா விடுதலை தினம் நமது தேசியப் பயணத்தில் ஒரு முக்கிய அத்தியாயத்தை நினைவூட்டுகிறது. அநீதியை ஏற்க மறுத்து, துணிச்சலுடனும் உறுதியுடனும் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் மன உறுதியை நாம் நினைவு கூர்கிறோம்.அவர்களின் தியாகங்கள் தொடர்ந்து நமக்கு உத்வேகம் அளிக்கின்றன” என்று கூறியுள்ளார்.