இந்தியா

கோவா சட்டவிரோத சுரங்க வழக்கில் ரூ.1,023 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

செய்திப்பிரிவு

பனாஜி: கோவா சட்​ட​விரோத இரும்​புத் தாது சுரங்க ஊழல் வழக்கில், ‘சல்​கோகர் குழு​மம்’ (ஏவிஎஸ் குழு​மம்) மற்​றும் அதன் கூட்டாளி​களுக்​குச் சொந்​த​மான ரூ.1,023.85 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கி​யுள்​ளது. இவை மறைந்த அனில் சல்​கோகரின் எஸ்​டேட் மற்​றும் அதன் கூட்டு நிறுவனங்களின் பெயர்​களில் உள்​ளன.

கோவா​வில் 2007 முதல் புதிய குத்​தகை வழங்​கப்​படும் வரை நடந்த சுரங்​கப் பணி​கள் சட்​ட​விரோத​மானவை என உச்ச நீதிமன்றம் தீர்ப்​பளித்​திருந்​தது. இதன் அடிப்​படை​யில் கோவா சிஐடி போலீ​ஸார் பதிவு செய்த எப்​ஐஆர் மூலம் அமலாக்​கத் துறை விசா​ரணை​யைத் தொடங்​கியது.

சல்​கோகர் குழு​மம் 2007- 12 கால ​கட்​டத்​தில் 10 சுரங்​கங்​களை சட்ட ​விரோத​மாக இயக்கி ரூ.2,492.95 கோடி ஈட்​டி​யுள்​ளது. வெட்டப்​பட்ட தாதுக்​களை பிரிட்​டிஷ் விர்​ஜின் தீவு​களில் (பி​விஐ) உள்ள போலி நிறு​வனங்​களுக்​குக் குறைந்த விலைக்கு ஏற்​றுமதி செய்​து, அங்​கிருந்து சீனா​வுக்கு மறு​விற்​பனை செய்​ததன் மூலம் மேலும் ரூ.2,744.89 கோடி லாபம் ஈட்​டி​யுள்​ளனர்.

ஒட்​டுமொத்​த​மாக ஈட்​டப்​பட்ட ரூ.5,237.84 கோடி குற்​றப் பணம், சிங்​கப்​பூர் மற்​றும் பிவிஐ போலி நிறு​வனங்​கள் மூலம் வெளி​நாட்டு சொத்​துகளில் முதலீடு செய்​யப்​பட்​டதோடு, ‘பங்கு மூல தனம்' என்ற பெயரில் மீண்​டும் இந்​தி​யா​வுக்​குள்​ளும் கொண்டு வரப்​பட்​டுள்​ளது வி​சா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT