இந்தியா

கார் முழுவதும் காதலி பதித்த 3,400 முத்தங்கள் - காதலனுக்கு ரூ.5,500 அபராதம் விதித்த ம.பி.போலீஸார்

செய்திப்பிரிவு

குவாலியர்: மத்​திய பிரதேசத்​தின் குவாலியர் பகு​தி​யைச் சேர்ந்தவர் ஆதித்ய சிகார்​வர். இவர் இன்​ஸ்​டாகி​ராம் சமூக வலை​தளத்​தில் அடிக்​கடி ரீல்ஸ்களை வெளி​யிடு​வது வழக்​கம். ஆனால் அவரது ரீல்ஸ்​களுக்கு அதிக லைக் கிடைக்​க​வில்​லை. சுமார் 3,000 பேர் மட்​டுமே அவரது இன்​ஸ்டா பக்​கத்தை பின்​தொடர்ந்​தனர்.

புது​மை​யான ரீல்ஸை வெளி​யிட திட்​ட​மிட்ட அவர், தனது காதலியை வரவழைத்​தார். அந்த பெண், ஆதித்ய சிகார்​வரின் வெள்ளை நிற கார் முழு​வதும் 3,400 முத்​தமழை பொழிந்​தார். இதனால் கார் முழு​வதும் லிப்​ஸ்​டிக் முத்த முத்​திரைகள் பதிந்​தன. இந்த வீடியோவை ஆதித்ய சிகார்​வர் தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் வெளி​யிட்​டார். ஒரே நாளில் 55 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் வீடியோவை பார்​வை​யிட்​டனர். லைக்​கு​கள் குவிந்​தன. பின்​தொடர்​வோரின் எண்​ணிக்​கை​யும் கணிச​மாக அதி​கரித்​தது.

இதன் பிறகு லிப்​ஸ்​டிக் முத்​தக்கறை படிந்த காரை குவாலியர் நகரின் முக்​கிய சாலை, தெருக்​களில் ஆதித்ய சிகார்​வர் ஓட்டித்திரிந்​தார். இந்​தக் கார் போக்​குவரத்து போலீ​ஸாரின் கவனத்தை ஈர்த்​தது. மேலும் வைரல் வீடியோ குறித்த தகவலும் அவர்​களுக்கு கிடைத்​தது. இதைத் தொடர்ந்து குவாலியரின் தாத்திபூர் பகு​தி​யில் சென்ற அந்​தக் காரை நேற்று முன்​தினம் போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

ஆதித்ய சிகார்​வருக்கு கண்​டிப்​பான அறி​வுரைகளை வழங்கினார். போலீ​ஸாரின் உத்​தர​வுப் படி காரில் படிந்​திருந்த லிப்​ஸ்​டிக் கறையை அவர் தண்​ணீரை ஊற்றி கழு​வி​னார். மேலும் போக்​கு​வரத்து விதி​களை மீறியதற்​காக அவருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்​கப்​பட்​டது. இந்த தொகையை அவர் செலுத்தினார்.

SCROLL FOR NEXT