இந்தியா

ஈரான் போரால் எரிசக்தி விநியோகம் பாதிப்பு: பயோ காஸ், சூரிய மின்சக்தி திட்டங்களில் இந்திய ராணுவம் தீவிரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு ஆசிய போரால் எரிசக்தி விநி​யோகம் பாதிக்கப்​பட்​டுள்ள நிலை​யில் பயோ காஸ் மற்​றும் சூரிய மின்சக்தி திட்​டங்​களில் இந்​திய ராணுவம் தீவிர கவனம் செலுத்தி வரு​கிறது.

இதுகுறித்து மூத்த ராணுவ அதி​காரி​கள் கூறிய​தாவது: சமையலுக்கு தேவை​யான மாற்று எரிசக்தி ஆதா​ரங்​களை நோக்கி ராணுவம் விரை​வாக நகர்ந்து வரு​கிறது. பயோ காஸ் அடுப்​பு​களை கொள்​முதல் செய்​வதற்​கான உத்​தர​வு​கள் ஏற்கெனவே தயார் நிலை​யில் உள்​ளன.

ராணுவம் முழு​வ​தி​லும் தின​மும் சுமார் 1,56,000 கிலோ சமையல் எரி​வாயு பயன்படுத்தப்படு​கிறது. இதில் சுமார் 20%, அதாவது நாளொன்றுக்கு சுமார் 30,000 கிலோ சமையல் எரி​வா​யுவை பயோ காஸ் மூலம் மட்​டுமே சேமிக்க முடி​யும்.

தற்​போது ஒவ்​வொரு வீரருக்​கும் சமையலுக்​காக நாள் ஒன்​றுக்கு 125- 135 கிராம் எரி​வாயு ஒதுக்​கப்​படு​கிறது. இது தவிர, நிர்​வாக, செயல்​பாடு மற்​றும் பயிற்சி நோக்​கங்​களுக்​காக 2 லட்​சத்​துக்​கும் அதி​க​மான பல்​வேறு வகை வாக​னங்​களை ராணுவம் இயக்குகிறது. இதனால் தின​மும் பெரு​மளவு எரிபொருள் நுகர்வு ஏற்​படு​கிறது.

இந்த சுமை​யைக் குறைக்க, நிர்​வாக ரீதி​யான ராணுவப் படைகளின் பயணத்தை 400 கி.மீ தூர​மாக கட்​டுப்​படுத்​தலாமா என்​றும், அதற்கு மேற்​பட்ட தூரத்​துக்கு ரயில் போக்​கு​வரத்தை அதிகபட்​ச​மாக பயன்​படுத்​தலாமா என்​றும் ஆலோ​சிக்​கப்​பட்டு வரு​கிறது.

வாக​னங்​களைப் பகிர்ந்​து​கொள்​வது, உணவுப் பொருட்​கள் சேகரிப்பு மற்​றும் படை வீரர்​களை ஏற்​றிச் செல்​லுதல் போன்ற பணி​களை ஒருங்​கிணைப்​பதும் பரிசீலனை​யில் உள்​ளது. சாத்திய​மான இடங்​களில் சிஎன்ஜி அல்​லது வாடகை மின்​சார வாக​னங்​களைப் பயன்​படுத்​து​வது ஊக்​குவிக்​கப்​படும். இவ்​வாறு ராணுவ அதி​காரி​கள் கூறினர்.

சூரிய மற்​றும் பயோ காஸ் ஆலைகளுக்​காக சுமார் 46,000 ஏக்​கர் பாது​காப்​புத் துறை நிலத்​தைப் பயன்​படுத்த ஆயுதப் படைகள் திட்​ட​மிட்​டுள்​ள​தாக கடந்த ஆண்டு டிசம்​பரில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT