இந்தியா

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி ஹரி பாக்ஸர் அமெரிக்காவில் கைது

இந்தியா அழைத்துவர நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 1998-ல் மானை வேட்​டை​யாடிய​தாக பெரும் சர்ச்சை எழுந்தது.

மானை வேட்​டை​யாடியதன் முலம் பிஷ்​னோய் சமூகத்​தின் மத உணர்​வு​களை காயப்​படுத்​தி​ய​தாகக் கூறி சல்​மான் கானுக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்​னோய் கும்பல் கொலை மிரட்​டல் விடுத்​து வருகிறது.

அவருடன் நெருக்​க​மாக இருக்​கும் பிற பாலிவுட் நடிகர்களை​யும் குறிவைத்து வரு​கிறது. இந்​நிலை​யில், லாரன்ஸ் பிஷ்​னோய் கும்​பலைச் சேர்ந்த தேடப்​படும் ரவுடி​யான ஹரி பாக்​ஸர் அமெரிக்​கா​வின் கலிபோர்​னியா மாகாணத்​தில் நேற்று முன்​தினம் இரவு கைது செய்​யப்​பட்​டார்.

மும்​பையில் பாலிவுட் இயக்​குநர் ரோஹித் ஷெட்​டி​யின் இல்​லத்​தில் நடந்த துப்​பாக்​கிச் சூடு சம்​பவத்​துக்​குப் பிறகு, இந்​தி​யப் பாது​காப்பு மற்​றும் உளவு அமைப்​பு​கள் ஹரி பாக்​ஸரின் நட​மாட்​டத்தை உன்​னிப்​பாகக் கண்​காணித்து வந்​தன.

அவரை இந்​தி​யா​வுக்கு கொண்​டுவர தேவையான நட​வடிக்​கைகளை அதி​காரி​கள் தொடங்​கு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பாலிவுட் பிரபலங்​கள் ரோஹித் ஷெட்டி, துஷார் கபூர், ரன்​வீர் சிங் உள்​ளிட்​டோருக்கு கொலை மிரட்​டல் விடுத்​தது உள்​ளிட்ட வழக்​குகளில் ஹரி பாக்​ஸர் முக்​கியக் குற்​றவாளி ஆவார்.

கடந்த மாதம், நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​தப்​பட்ட சம்​பவத்​திலும் இவருக்கு தொடர்பு இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

அதன்​படி டெல்லி காவல் துறை சிறப்​புப் பிரிவு மற்​றும் ஹரியானா சிறப்பு அதிரடிப் படை வழங்​கிய ரகசிய தகவலின் அடிப்​படை​யில் அமெரிக்க அதி​காரி​களால் ஹரி பாக்​ஸர் கைது செய்​யப்​பட்​டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT