இந்தியா

ஹைதராபாத்தில் போலீஸ் வேடமிட்டு நகை வியாபாரியை கடத்தி ரூ.1.3 கோடியை பறித்த கும்பல் கைது

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் போலீஸ் போல நடித்து நகை வியா பாரியை கடத்​திச் சென்று ரூ.1.3 கோடி பணம் பறிக்​கப்​பட்ட சம்​பவத்​தில் 10 பேர் அடங்​கிய கும்​பலை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

இது​குறித்து செகந்​திரா​பாத் மண்​டல துணை ஆணை​யர் ரக்​சிதா கிருஷ்ணா மூர்த்தி கூறிய​தாவது: கடந்த 5-ம் தேதி ஹைத​ரா​பாத் ராமந்​தாபூர் பகுதி​யில் தனது நகைக் கடைக்​குச் சென்று கொண்​டிருந்த ஸ்ரீனிவாச ராவ் (53) என்ற நகை வியாபாரியை, போலீஸ் போல வேட​மிட்டு வந்த மர்ம கும்​பல் வழிமறித்து கடத்தி உள்​ளது.

இந்​தக் கும்​பல் நகை வியாபாரியை ரகசிய இடத்​தில் அடைத்து வைத்து ரூ.15 கோடி கேட்டு மிரட்​டியதோடு அவரிட​மிருந்த ரூ.1.3 கோடியையும் பறித்​துள்​ளது.

போலீ​ஸாரின் சோதனைகளில் சிக்​காமல் இருக்க, இந்​தக் கும்​பல் போலி வாகன எண்​களைப் பயன்​படுத்​தி​யதோடு, தப்​பிச் செல்​லும் வழி​யில் கார்​களை​யும் மாற்​றிப் பயணித்​துள்​ளது. எங்​களது தனிப்​படை​யினர் ஒருங்​கிணைந்து செயல்​பட்டு 10 குற்​றவாளி​களைக் கைது செய்​துள்​ளனர்.

போடூப்​பல், ஹேமநகரில் உள்ள ஒரு மனைப் பிரிவு தொடர்​பான தக​ராறே இந்த குற்​றத்​துக்கு முக்​கியக் காரணம் என விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

முக்​கியக் குற்​றவாளியான துமாவத் காந்த், குஞ்​சாபோகு சுரேஷ் (என்​கிற சூர்யா / சூரி) மற்​றும் னிவாஸ் ரெட்டி ஆகியோ​ருடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதமே இந்​தத் திட்​டத்​தைத் தீட்​டியுள்​ளது விசா​ரணை​யில் அம்​பலமாகி​யுள்​ளது.

கைதான கும்​பலிட​மிருந்து ரூ.1.07 கோடி ரொக்​கம், 118.26 கிராம் தங்​கம், 5 வாக​னங்​கள் மற்​றும் 9 கைப்​பேசிகள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT