புதுடெல்லி: கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. நாடாளுமன்ற வழக்கத்தை பின்பற்றினால் பிப்ரவரி 1-ம் தேதியே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் தாக்கல் செய்வார்.
ஆனால், பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மத்திய அரசு பட்ஜெட், மாற்றுத் தேதியில் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய பட்ஜெட் கூட்டத் தொடருக்கு இன்னும் ஒன்றரை மாதமே இருக்கும் நிலையில், 2026 - 27 பட்ஜெட்டில் இடம்பெற வேண்டியவை குறித்த தயாரிப்பு பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
மேலும் பிப்ரவரி 1-ம் தேதி அன்றைய தினத்தில் குருரவிதாஸ் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமா? அல்லது பிப்ரவரி 2-ம் தேதி பட்ஜெட் தாக்கலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.