இந்தியா

காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக் கூடாது: விபத்து இழப்பீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மோட்​டார் வாகன விபத்து இழப்பீடு தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் சஞ்​சய் கரோல், அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசாரணைக்கு வந்த நிலை​யில், அவ்​வழக்கை விசா​ரித்த நீதிபதிகள் அடங்​கிய அமர்வு இந்த உத்​தரவை பிறப்​பித்​துள்​ளது.

நாட்​டில் உள்ள 30.05 கோடி வாக​னங்​களில் சுமார் 16.5 கோடி வாகனங்​களுக்கு காப்​பீடு இல்லை என்​றும், இதனால் விபத்​தில் பாதிக்​கப்​படு​பவர்​கள் இழப்​பீடு கிடைக்​காமல் அலைக்​கழிக்​கப்​படு​வ​தாக​வும் நீதிப​தி​கள் அதிருப்தி தெரி​வித்​தனர்.

முன்​ன​தாக, புதிய கார்​களுக்கு 3 ஆண்​டு​களுக்​கும், இருசக்கர வாக​னங்​களுக்கு 5 ஆண்​டு​களுக்​கும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டா​யம் என 2018-ல் உச்ச நீதி​மன்ற உத்​தர​வி்ட்​டது. 8 ஆண்​டு​கள் கடந்​தும் ஏராள​மான வாக​னங்​கள் காப்​பீடு இன்​றியே இயங்கி வரு​வதை நீதிப​தி​கள் சுட்​டிக்​காட்​டினர்.

இச்​சூழலைச் சீரமைக்க, காப்​பீடு இல்​லாத வாக​னங்​களுக்கு எரிபொருள் வழங்​காத வகையி​லான மாதிரித் திட்​டத்தை மத்​திய சாலைப் போக்​கு​வரத்து அமைச்​சக​மும், ‘ஐஆர்​டிஏஐ’ அமைப்​பும் இணைந்து உடனடி​யாகச் செயல்​படுத்த நீதிப​தி​கள் உத்தரவிட்டனர்.

இதன்​படி, காப்​பீட்​டைப் புதுப்​பிக்​கும் வரை பெட்ரோல் பங்​கு​களில் எரிபொருள் வழங்​கப்​ப​டாது. இது அனைத்து வாக​னங்​களுக்​கும் காப்​பீட்​டைக் கட்​டாய​மாக்​கும் மோட்​டார் வாக​னச் சட்​டப் பிரிவு 146-ஐ உறுதி செய்​யும்.

மேலும், புதிய கார்​களுக்​கான காப்​பீட்டை 3-லிருந்து 4 ஆண்டுகளுக்​கும், இருசக்கர வாக​னங்​களுக்கு 5-லிருந்து 6 ஆண்டுகளுக்​கும் நீட்​டிக்க ‘ஐஆர்​டிஏஐ’ அமைப்​புக்​கு உத்தரவிடப்பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT