விஜயவாடா: விஜயவாடாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘ஏழைகளுக்கு பட்டாபிஷேகம்’ திட்டத்தின் கீழ் 26,401 ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றினோம்.
மத்திய அரசின் ஒத்துழைப்போடு நம்முடைய ஆட்சி வெற்றி நடைபோடுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 60 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கியுள்ளோம். நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பெண்களுக்கு இலவச ஏசி பேருந்து திட்டமும் அமல்படுத்தப்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.