கோப்புப்படம்

 
இந்தியா

உ.பி.யில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் மோசடி: ஆட்சியர்களிடம் விவசாயிகள் மனு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடு முழு​வதும் பயிர் காப்​பீடு திட்​டத்துக்கான பிரிமி​யம் தொகை​யில் மத்​திய அரசு 40%, மாநில அரசு 50% விவ​சாயி 10% செலுத்​துகின்​றனர். வறட்​சி, வெள்​ளம் உள்​ளிட்ட காரணத்​தால் விளைச்​சல் பாதிக்​கப்​படும்​போது விவ​சா​யிகளுக்கு உரிய இழப்​பீடு வழங்​கப்​படு​கிறது.

இந்​நிலை​யில், உத்தர பிரதேசத்​தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாதிக்​கப்​பட்ட விவ​சா​யிகளுக்​கான இழப்​பீட்​டுத் தொகை இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டது. ஆனால் அந்​தத் தொகை டிசம்​பரில் குறைக்​கப்​பட்​டுள்​ளது. இதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த விவ​சா​யிகள், மாவட்ட ஆட்​சி​யரிடம் புகார் அளித்​துள்​ளனர்.

மஹோபா மாவட்​டம் சந்​தோஷ்புரா கிராமத்​தில், 113 விவ​சா​யிகளுக்கு ரூ.55 லட்​சம் இழப்​பீடு வழங்​கப்​பட்​ட​தாகக் காட்​டப்​பட்​டது. ஆனால், விசா​ரணை தொடங்​கிய பிறகு, டிசம்​பர் 10 அன்​று, அதே எண்​ணிக்​கையி​லான விவ​சா​யிகளுக்கு ரூ.9 லட்​சம் மட்​டுமே வழங்​கப்​பட்​ட​தாக இணை​யதளத்​தில் காட்​டப்​பட்​டது. இதே​போல், லுஹாரி கிராமத்​தில் ஆகஸ்ட் மாதம் ரூ.1.47 கோடி வழங்​கப்​பட்​ட​தாகக் காட்​டப்​பட்​டது, அது டிசம்​பரில் ரூ.39 லட்​ச​மாகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது.

குல்​பஹார் தாலு​கா​வில் உள்ள இந்​தோரா கிராமத்​தில், ரூ.1.1 கோடி காப்​பீட்​டுத் தொகை விநி​யோகிக்​கப்​பட்​டது. இந்​தக் கிராமத்​தில் 33 பேர் ரூ.83.49 லட்​சம் பெற்​றுள்​ளனர். இந்த 33 பேரில் ஒரு​வர் கூட இந்​தக் கிராமத்​தைச் சேர்ந்​தவர்கள் அல்லர்.

இதுகுறித்து மஹோ​பா​வில் போராட்​டம் நடத்தி வரும் விவ​சாய சங்​கத் தலை​வர் குலாப் சிங் கூறுகை​யில், ‘‘விவ​சா​யிகளின் எண்​ணிக்கை மற்​றும் காப்​பீடு செய்​யப்​பட்ட நிலப்​பரப்பு ஆகியவை மாற்றி அமைக்​கப்​பட்​டுள்​ளன. பயிர் காப்​பீட்டு திட்​டத்​தில் தேசிய அளவில் பல ஊழல் நடை​பெறு​வ​தாக சந்​தேகம் உள்​ளது. இதன் மீது மத்​திய அரசு விரி​வான விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்​றார்.

வாகன காப்​பீடு திட்​டத்​தில் தனி நபர் பயனடைய முடி​யும். ஆனால், பயிர் காப்​பீடு திட்​டத்​தில் தனி​நபரின் பயிர் பாதிக்​கப்​பட்​டால் காப்​பீடு கிடைப்​ப​தில்​லை. ஒரு கிராமமே பா​திக்​கப்​பட்​டால்​தான் பலன் கிடைக்​கிறது. மேலும்​ அனை​வருக்​கும்​ ஒரே தொகை கிடைப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT