இந்தியா - சிங்கப்பூர் இடையே அமைச்சர்கள் நிலையிலான 4-வது வட்டமேசை சந்திப்பு சிங்கப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் ஜித்தின் பிரசாதா ஆகியோர், சிங்கப்பூர் துணை பிரதமர் கான் கிம் யோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படம்: பிடிஐ

 
இந்தியா

இந்தியா - சிங்கப்பூர் அமைச்சர்கள் 4-வது வட்டமேசை சந்திப்பு: நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சிங்கப்பூர்: இந்​தி​யா-சிங்​கப்​பூர் இடையே பல்​வேறு துறை​களில் இருதரப்பு ஒத்​துழைப்பை வலுப்​படுத்​தும் நோக்​கில், இரு​நாடு​களில் அமைச்​சர்​கள் நிலை​யி​லான வட்​டமேசை சந்​திப்பு (ஐஎஸ்​எம்​ஆர்) கடந்த 2022-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​டது.

இந்நிலையில் 4-வது ஐஎஸ்​எம்​ஆர் சிங்​கப்​பூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் இந்​தியா சார்​பில் வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர், நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன், வர்த்​தகம் மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல், மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத் துறை இணை அமைச்​சர் ஜித்​தின் பிர​சாதா ஆகி​யோர் கலந்து கொண்​டனர்.

இந்​தச் சந்​திப்​பில், வேளாண் உணவு வர்த்​தகம் மற்​றும் கடல்​சார் பாரம்​பரி​யம் போன்ற துறை​களில் ஒத்​துழைப்பை விரி​வுபடுத்​து​வதற்​கான வழிகள் குறித்து இரு நாடு​களும் ஒப்​பந்​தங்​களை மேற்​கொண்​டன. மேலும், டிஜிட்​டல்​மய​மாக்​கல், திறன் மேம்​பாடு, சுகா​தா​ரம் மற்​றும் மருத்​து​வம், மேம்​பட்ட உற்​பத்தி மற்​றும் இணைப்​புத்​திறன் ஆகிய​வற்​றில் ஒத்​துழைப்பை வலுப்​படுத்​து​வது குறித்து இருதரப்​பும் முக்​கிய முடிவு​களை எடுத்​தன.

இரு நாடுகளுக்​கும் இடையி​லான முதலீடும் வர்த்​தக​மும் அதி​கரித்​துள்ள நிலை​யில், விமானப் போக்​கு​வரத்து இணைப்பை அதி​கரிக்க வேண்​டியதன் அவசி​யம் குறித்​தும் அமைச்​சர்​கள் விவா​தித்​த​தாக சிங்​கப்​பூர் துணைப் பிரதமர் கான் கிம் யோங் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​தார். வட்​டமேசை சந்​திப்​புக்கு முன்​பாக இந்​திய அமைச்​சர்​கள் 4 பேரும் சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்​தித்து இருதரப்பு உறவு​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

ரூ.18.64 லட்​சம் கோடி முதலீடு: இதனிடையே, இந்​தி​யா​வுக்​கும் சிங்​கப்​பூருக்​கும் இடையி​லான பொருளா​தார உறவு​கள் தொடர்ந்து விரி​வடைந்து வரு​வ​தாக​வும், இந்​தி​யா​வின் மிகப்​பெரிய அந்​நிய நேரடி முதலீட்டு ஆதா​ர​மாக சிங்​கப்​பூர் விளங்கி வரு​வ​தாக​வும் மத்​திய வர்த்தக அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக அந்த அமைச்​சகம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “2025-26 நிதி​யாண்​டில் ரூ.1.89 லட்​சம் கோடி முதலீட்டு வரவுடன், சிங்​கப்​பூர் இந்​தி​யா​வின் மிகப்​பெரிய அந்​நிய நேரடி முதலீட்டு ஆதா​ர​மாக விளங்​கியது.

ஏப்​ரல் 2000 முதல் மார்ச் 2026 வரையி​லான கால​கட்​டத்​தில் சிங்​கப்​பூரிலிருந்து வந்த ஒட்​டுமொத்த அந்​நிய நேரடி முதலீடு ரூ.18.64 லட்​சம் கோடியாக இருந்​தது. அதே வேளை​யில் இந்​தி​யா​வுக்​கும் சிங்​கப்​பூருக்​கும் இடையி​லான வர்த்​தகம், 2004-05 நிதி​யாண்​டில் ரூ.64.15 ஆயிரம் கோடியிலிருந்து 2025-26 நிதி​யாண்​டில் ரூ.3.45 லட்​சம் கோடியாக உயர்ந்​துள்​ளது” என கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT