இந்தியா

“ராஜினாமா செய்தது எனது மனப்பூர்வமான முடிவு” - முன்னாள் ஆளுநர் ஆனந்தபோஸ் தகவல்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுந​ராக இருந்த சி.​வி.ஆனந்த போஸ், சில நாட்​களுக்கு முன்பு ராஜி​னாமா செய்தார். அவரது ராஜினாமா குறித்து சர்ச்​சைகள் எழுந்​தன. பல்​வேறு நபர்​களின் அழுத்​தம் காரண​மாக​வும், குறுக்​கீடு காரண​மாக​வும் சி.வி. ஆனந்த​ போஸ் ராஜி​னாமா செய்​த​தாக மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி குற்​றம்​சாட்​டி​னார்.

இதைத் தொடர்ந்து அவர் நேற்று கொல்​கத்தா விமான​நிலையத்தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மேற்கு வங்க ஆளுந​ராக நான் 1,200 நாட்​கள் பதவி வகித்​தேன். இது கிரிக்கெட்டில் 12 செஞ்​சுரி​கள் அடிப்​ப​தற்கு சமம்.

          

நான் ராஜினாமா செய்​தது மனப்​பூர்​வ​மாக எடுத்த முடிவு. பல முறை யோசித்த பின்​னரே நான் ராஜி​னாமா செய்​தேன். எப்போது ராஜி​னாமா செய்​ய​வேண்​டும் என்​ப​தற்கு எனக்கு அதிக சந்​தர்ப்​பம் தரப்​பட்​டது. சரி​யான நேரம் வந்​ததும் ராஜி​னாமா செய்​தேன். இதில் யாருடைய குறுக்​கீடும் இல்​லை. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT