முன்னாள் முதல்வர் நாதள்ள பாஸ்​கர் ராவ்

 
இந்தியா

என்​.டி.​ரா​மா​ரா​வின் ஆட்​சியை கவிழ்த்த ஆந்திர முன்னாள் முதல்வர் நாதள்ள பாஸ்கர் ராவ் காலமானார்

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: ஒருங்​கிணைந்த ஆந்​திர மாநிலத்​தில், என்​.டி.​ரா​மா​ரா​வின் ஆட்​சியை கவிழ்த்து முதல்​வ​ரான, நாதள்ள பாஸ்​கர் ராவ் (90) நேற்று கால​மா​னார்.

வழக்​கறிஞ​ரான நாதள்ள பாஸ்​கர் ராவ், காங்​கிரஸ் கட்​சி​யில் இணைந்து 1978-ல் எம்எல்ஏ ஆனார். இதையடுத்து சென்னா ரெட்டி​ அமைச்​சர​வை​யில் இடம் பிடித்​தார். 1982-ல் என்​.டி.​ரா​மா​ராவ் தலை​மை​யில் தெலுங்கு தேசம் கட்சி உரு​வான​தில் முக்​கியப் பங்கு வகித்​தார். 1983-ல் ஆந்​திர முதல்​வ​ராக என்​.டி.​ரா​மா​ராவ் பதவி​யேற்​றார். அப்​போது பாஸ்​கர் ராவ் நிதி அமைச்​ச​ரா​னார். 1984-ல் என்​டிஆர் மருத்​துவ சிகிச்​சைக்​காக அமெரிக்கா சென்றார்.

அப்​போது அவரது ஆட்​சியை கவிழ்த்​து, ஆகஸ்ட் 16, 1984-ல் ஆந்திர முதல்​வ​ரா​னார். இதற்​கிடை​யில் நாடு திரும்​பிய என்.டி.ஆர், நீதி கேட்டு மாநிலம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்கொண்​டார். இதையடுத்து பாஸ்​கர் ராவ், ஒரு மாதத்​தில் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். முதல்​வ​ராக என்​டிஆர் மீண்​டும் பதவி​யேற்​றார். நாதள்ள பாஸ்​கர் ராவ், 1998-ல் காங்கிரஸ் எம்​பி​யாக கம்​மம் தொகு​தி​யில் இருந்து தேர்ந்தெடுக்கப்​பட்​டார். 2019-ல் பாஜக​வில் இணைந்​தார்.

பாஸ்​கர் ராவ் சமீபத்​தில் உடல்​நலக் குறைவு காரண​மாக ஹைதரா​பாத்​தில் உள்ள ஒரு தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். இவரது மகன் நாதள்ள மனோகர், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்​து, ஆந்​தி​ரா​வில் சந்திர​பாபு நாயுடு​வின் கூட்​டணி அரசில் சமூக நலத்​துறை அமைச்​ச​ராக பணி​யாற்றி வரு​கிறார். பாஸ்​கர் ராவின் இறு​திச் சடங்​கு​கள் இன்று ஹைத​ரா​பாத் பஞ்​சகுட்டா மயானத்​தில் நடை​பெறும் என்று அவரது​ குடும்​பத்​தினர்​ அறி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT