மும்பை: ‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நடத்திய பேரணியின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன்’’ என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் நோக்கி ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பேரணி நடத்தியது சரியல்ல. இது நீதித்துறை அவமதிப்பு. ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட அவமானாம். அவர்கள் இந்தியாவின் 140 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த பேரணியின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்திகள் இருக்கலாம் என்று நான் சந்தேகப்படுகிறேன். பிரதமர் பதவியை எதிர்க்கட்சியினர் மதிக்க வேண்டும். இதுபோன்ற போராட்டங்கள் நாட்டுக்குத் தீங்கு விளைவிப்பவை. இவ்வாறு ஷிண்டே தெரிவித்தார்.