ரத்னா தேவ்நாத்துக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி. மகளின் உயிரிழப்புக்காக மக்களிடம் நீதி கேட்கும் சபினா யாஸ்மின்.

 
இந்தியா

மேற்கு​ வங்க தேர்தல் களத்தில் மக்களிடம் நீதி கேட்கும் மகள்களை இழந்த 2 பெண்கள்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்​கு​வங்​கத்​தில் முதல் கட்ட சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நிறைவடைந்​து, நாளை 2-ம் கட்ட தேர்​தலுக்​கான வாக்​குப்​ப​திவு நடை​பெற உள்​ளது. இதில் இரு பெண் வேட்​பாளர்​களின் ஆவேச பிரச்​சா​ரம் மக்​களிடையே பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்தி உள்​ளது.

பெண் மருத்​து​வர் கொலை: கடந்த 2024-ல் ஆக.9-ம் தேதி மேற்​கு​வங்க தலைநகர் கொல்​கத்​தா​வில் ஆர்​.ஜி.கர் அரசு மருத்​து​வ​மனை​யில் இரவு பணி​யில் இருந்த 31 வயதான பெண் மருத்​து​வர் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்டு கொடூர​மாக கொலை செய்​யப்​பட்​டார்.

அந்த பெண் மருத்​து​வர் தற்​கொலை செய்து கொண்​ட​தாக மருத்​து​வ​மனை நிர்​வாகம் பெற்​றோரிடம் கூறியது. மேலும் கொலையை மறைக்க மருத்​து​வ​மனை நிர்​வாகம் பல்​வேறு வழிகளைக் கையாண்​டது. ஆனால் மேற்​கு​வங்​கம் முழு​வதும் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள், மருத்​து​வர்​கள் கொதித்​தெழுந்து தொடர் போராட்​டங்​களை நடத்​தினர். இதன்​காரண​மாக பெண் மருத்​து​வர் மரணம் குறித்து தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்​டது. இதில் அவர் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​டு, கொலை செய்​யப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது.

நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்​றப்​பட்​டது. ஆனால் கொலை நடந்த இடத்​தில் முக்​கிய ஆதா​ரங்​கள் அழிக்​கப்​பட்டு இருந்​த​தால் சிபிஐ அதி​காரி​களால் முழு உண்​மை​களை வெளிச்​சத்​துக்கு கொண்டு வர முடிய​வில்​லை. இந்த வழக்​கில் மேற்​கு​வங்க காவல் துறை​யில் தன்​னார்​வல​ராக பணி​யாற்​றிய சஞ்​சய் ராய்க்கு மட்​டும் ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்டு உள்​ளது. ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர்​களின் ஆதர​வுடன் பலர் வழக்​கில் இருந்து தப்​பி​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

பெண் மருத்​து​வரின் கொலைக்கு நீதி கேட்டு அவரது தாய் ரத்னா தேவ்​நாத் பல்​வேறு போராட்​டங்​களை முன்​னின்று நடத்​தி​னார். அவருக்கு பாஜக ஆதர​வுக் கரம் நீட்​டியது. தற்​போது பனிஹாட்டி சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் பாஜக வேட்​பாள​ராக அவர் முன்​னிறுத்​தப்​பட்டு உள்​ளார். சில நாட்​களுக்கு முன்பு ரத்னா தேவ்​நாத்​துக்கு ஆதர​வாக பிரதமர் மோடி பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது பிரதமர் கூறும்​போது, “பாலியல் வன்​கொடுமை குற்​ற​வாளி​கள் அனை​வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கைக்​குப் பிறகு நீதி​யின் முன்பு நிறுத்​தப்​படு​வார்​கள்" என்று உறுதி அளித்​தார்.

குண்​டு​வெடிப்​பில் சிறுமி.. கடந்த ஆண்டு கலிகஞ்ச் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. இதில் திரிண​மூல் காங்​கிரஸ் வெற்றி பெற்​றது. அப்​போது ஆளும் கட்​சி​யினர் வெற்​றி​விழா ஊர்​வலத்தை நடத்​தினர். சிலர் நாட்டு வெடிகுண்​டு​களை வீசினர். இதில் ஒரு குண்டு குடி​யிருப்பு பகு​திக்​குள் விழுந்து வெடித்​துச் சிதறியது. இதில் தமன்னா சாதுன் (9) என்ற சிறுமி உயி​ரிழந்​தார். இந்த சிறுமி​யின் தாய் சபினா யாஸ்​மின், கலிகஞ்ச் தொகு​தி​யில் மார்க்​சிஸ்ட் வேட்​பாள​ராக களமிறக்​கப்​பட்டு உள்​ளார்.

பிரச்​சா​ரத்​தின்​போது அவர் கூறும்​போது, “வன்​முறையை எதிர்த்​தும், குழந்​தைகளின் பாது​ காப்பை முன்​னிறுத்​தி​யும் தேர்​தலில் போட்​டி​யிடு​கிறேன். எனது மகளை போன்று வேறு எந்த குழந்​தை​யும் கொடூர​மாக உயி​ரிழக்​கக்​கூ​டாது. எனது மகளின் உயி​ரிழப்​புக்​காக மக்​கள் மன்​றத்​தில் நீதி கேட்டு நிற்​கிறேன்" என்று தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT