இந்தியா

மெஸ்ஸி நிகழ்ச்சி கட்டணம் 33,000 பேருக்கு வாபஸ்: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி உறுதி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் உள்ள யுவபாரதி மைதானத்​தில் கடந்த ஆண்டு டிச.13-ல் நடந்த நிகழ்ச்சியில் பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி பங்கேற்றார். இந்​நிகழ்ச்​சி​யில் கடும் நெரிசல் ஏற்​பட்டு பாதிக்கப்பட்​டது. இதனால், டிக்​கெட் வாங்​கியிருந்த ரசிகர்​களால் இந் நிகழ்ச்சி​யில் பங்​கேற்க முடிய​வில்​லை.

இந்​நிலை​யில், நேற்று முன்தினம் நடந்த தேசிய விளை​யாட்டு தின விழா​வில் மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரி பேசும்​போது, “போ​திய பாது​காப்பு வசதி​யின்​மை, விஐபிகளின் தலையீடு மற்​றும் மோச​மான நிர்​வாகமே மெஸ்ஸி நிகழ்ச்​சி​யில் ஏற்​பட்ட குளறு​படிக்​குக் காரணம். இதனால் பாதிக்​கப்​பட்ட 33,000 ரசிகர்களுக்​கு, அவர்​கள் நுழைவுச் சீட்​டுக்​குச் செலுத்​திய ரூ.4,000, ரூ.6,000 கட்​ட​ணத்தை விளை​யாட்​டுத் துறை நிதி மூலம் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது” என்​றார்.

தொடர்ந்து பேசிய அவர், முந்​தைய ஆட்​சி​யில் விளை​யாட்​டுத் துறை புறக்​கணிக்​கப்​பட்​ட​தால் வீரர்​களின் வேலை​வாய்ப்​புக் கோப்​பு​கள் 11 ஆண்​டு​களாக தூசு படிந்து கிடந்​த​தாகச் சாடி​னார். இந்​நிலையை மாற்ற 8 மாதங்​களுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், மாநிலத்​தின் 294 தொகு​தி​களில் மினி விளையாட்டு அரங்​கங்​கள் அமைக்​கும் திட்​டத்​தில் முதற்கட்டமாக 100 அரங்​கங்​கள் கட்​டப்​படும்​ என்​றும்​ உறுதியளித்​தா​ர்​.

SCROLL FOR NEXT