அனுராக் தண்டா
சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் அனுராக் தண்டா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ”ஹரியானா மண்ணைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள் தான் ஒலிம்பிக், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூவர்ணக் கொடி உயரப் பறக்க காரணமாக இருந்தவர்கள். ஆனால், மாநிலத்திலுள்ள விளையாட்டு நர்சரிகளில் பயிற்சி பெறும் 37,000 தடகள வீரர்களுக்கு கடந்த 10 மாதங்களாக உணவுப்படி வழங்கப்படவில்லை.
அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கும் கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் வீரர்கள் தங்கள் உணவிற்கு வழி தேடுவதா அல்லது போட்டிகளுக்குத் தயாராவதா ? 75,000 முதியோர்களுக்கான ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.