இந்தியா

மோசமான வானிலை: விமானம் வானில் வட்டமடித்ததால் பயணிகள் பீதி

4 மணி நேரத்துக்குப் பிறகு பெங்களூருவில் பத்திரமாக தரையிறங்கியது

செய்திப்பிரிவு

ஹுப்பள்ளி: பிளை 91 ஏர்​லைன்ஸ் நிறு​வனத்​துக்​குச் சொந்​த​மான ஏடிஆர் ரக விமானம் ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​திலிருந்து நேற்று முன்​தினம் மாலை 3 மணிக்கு புறப்​பட்​டது. மாலை 4.30 மணிக்கு கர்நாடகாவின் ஹுப்​பள்​ளியை நெருங்​கியதும் மோச​மான வானிலை காரண​மாக தரை​யிறங்க முடிய​வில்​லை.

வானிலை சீரடைவதற்​காக அந்த விமானம் கர்​நாட​கா​வின் முந்​காட், தேவனகிரி மற்​றும் சிவ​மோகா ஆகிய பகு​தி​களில் வட்​டமடித்துக் கொண்​டிருந்​தது. விமானம் தரை​யிறங்​காமல் வெகு நேரம் சுற்​றிய​தால் பயணி​கள் பீதி​யடை​ந்தனர். அப்​போது பைலட் ‘‘மோச​மான வானிலை​யால் வானில் தொடர்ந்து பறந்து கொண்​டிருக்​கிறோம். வானிலை சீரடைந்​ததும் தரை​யிறங்​கலாம். இதுகுறித்த தகவலை அவ்​வப்​போது தெரி​விப்​போம். பொறுமை​யாக இருந்​து, விமான ஊழியர்​கள் சொல்​வதை பின்​பற்​ற​வும்’’ என தெரிவித்தார்.

அதற்​குள் பதற்​றமடைந்த பயணி​கள், ‘‘பெங்​களூருக்கு செல்​லும்​படி பைலட்​டிடம் கூறுங்​கள், அல்​லது பெல்​ஹாம் போகலாம்’’ என ஒரு பயணி கூறி​யுள்​ளார். ‘‘ஆ​மாம். பெல்​ஹாம் அரு​கில்​தான் உள்​ளது’’ என மற்றொரு பயணி கூறி​னார். ஒன்​றரை மணி நேரத்​தில் தரை​யிறங்க வேண்​டிய விமானம், தொடர்ந்து 4 மணி நேரத்​துக்கு மேல் பறந்​த​தால் பயணி​கள் இடையே அச்​சம் அதிகரித்தது. ஒரு பெண் பயணி கைகளை கூப்பி பிரார்த்​தனை செய்​த​படி அழ ஆரம்​பித்​தார். அவரது உடல் நடுங்​கத் தொடங்​கியது.

ஓ.. மை காட் என பல பயணி​கள் கூறும் சத்​தம் விமானத்​துக்​குள் எடுக்​கப்​பட்ட வீடியோ​வில் பதி​வானது. அழ வேண்​டாம், ஒன்​றும் ஆகாது, பொறுத்​திருங்​கள் என மற்​றொரு​வர் கூறும் சத்​த​மும் கேட்​டது. ஹூப்​பள்​ளி​யில் தரை​யிறங்க விமானம் பல முறை முயன்​றும், இறங்க முடிய​வில்​லை. அதனால் அந்த விமானம் கடைசி​யாக பெங்​களூரு திருப்​பி​விடப்​பட்​டு, கெம்​பேக​வுடா விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் 7.30 மணிக்கு தரை​யிறங்​கியது. அதன்​பின்பே பயணி​கள் நிம்​மதி பெரு​மூச்சு விட்​டனர்.

இதுகுறித்து பிளை 91 ஏர்​லைன்ஸ் விடுத்​துள்ள அறிக்​கை​யில் கூறிய​தாவது: ஹைத​ரா​பாத்​திலிருந்து ஹூப்​பள்​ளிக்கு புறப்​பட்ட விமானத்​தில் தொழில்​நுட்ப கோளாறு எது​வும் ஏற்​பட​வில்​லை. மோச​மான வானிலை காரண​மாக அந்த விமானம் விதி​முறைப்​படி பெங்​களூருக்கு திருப்​பி​விடப்​பட்​டது. அதன்​பின் அந்த விமானம் ஹூப்​பள்​ளிக்​கும், ஹைத​ரா​பாத்​துக்​கும் சென்​றது. விமான பைலட்​டு​களும், ஊழியர்​களும் திறமை​யானவர்​கள், எந்​தச்​ சூழலை​யும்​ ச​மாளிக்​கும்​ திறன்​ படைத்​தவர்​கள்​. எங்​கள்​ வி​மான நிறு​வனம்​ சிறந்​த ​பாது​காப்​புடன்​ செயல்​பட்​டு வரு​கிறது. இவ்​​வாறு அதில் கூறப்பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT