இந்தியா

பிரதமர் வருகைக்கு பிளக்ஸ்போர்டு: சொந்த கட்சிக்கே அபராதம் விதித்தது திருவனந்தபுரம் மாநகராட்சி

காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், கேரளாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்களுக்கு முன்பாக திருவனந்தபுரம் வந்தார்.

இதனால் திருவனந்தபுரம் மாவட்ட பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று சாலை நடைபாதைகளில் பிளக்ஸ்போர்டுகள் வைக் கப்பட்டன. பொது இடங்களில் சட்டவிரோதமாக பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டால், அவர்கள் மீது திருவனந்தபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. அதை மீறி பேனர்கள் வைக்கப்பட்டன.

          

இதையடுத்து பாஜக. மாவட்ட தலைமை ரூ.19.7 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என திருவனந்தபுரம் மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பாஜக மாவட்ட தலை

வர் கரமனா ஜெயன் மீது கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திருவனந்தபுரம் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT