காங்டாக்: திபெத்தில் அமைந்துள்ள கைலாய மலையை தரிசனம் செய்யச் செல்லும் ஆன்மிகப் பயணமே கைலாய யாத்திரை ஆகும்.
உத்தரா கண்டின் லிபுலேக் கணவாய், சிக்கிம் மாநிலத்தின் நாதுலா கணவாய் வழியாக இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு யாத்திரை ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டில் முடிவடைகிறது.
இந்நிலையில் நாதுலா கணவாய் வழியே கைலாய யாத்திரை செல்வதற்கான இந்தாண்டின் முதல் குழுவினர் நேற்று முன்தினம் காங்டாக் நகரை வந்தடைந்தனர். 32 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 44 யாத்ரீகர்கள் இடம்பெற்றுள்ள இக்குழுவில் அதிகாரிகளும் மருத்துவக் குழுவினரும் உள்ளனர்.