இந்தியா

பெரோஸ் காந்தி லைசென்ஸ் ராகுல் காந்தியிடம் ஒப்படைப்பு

செய்திப்பிரிவு

ரேபரேலி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் ரேபரேலி தொகுதியின் முன்னாள் எம்.பி. ஆவார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது ரேபரேலி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அப்போது ரேபரேலி பிரீமியர் லீக் கிரிக்கெட் அமைப்புக் குழுவின் உறுப்பினரான விகாஸ் சிங் என்பவர், பெரோஸ் காந்தியின் டிரைவிங் லைசென்ஸை ராகுல் காந்தியிடம் வழங்கினார்.

தொலைந்து போன இந்த டிரைவிங் லைசென்ஸ், விகாஸ் சிங்குக்குக் கிடைத்துள்ளது. அதைத்தான் அவர் ராகுலிடம் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த டிரைவிங் லைசென்ஸை புகைப்படம் எடுத்து அதை தாயார் சோனியா காந்தி புகைப்படத்துடன் ராகுல் காந்தி, சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார்.

          
SCROLL FOR NEXT