கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் செவிலியர் ஒருவரின் உடல் கழிவறையில் இருந்து மீட்கப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள நில்ரத்தன் சர்கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாலி பர்மன் (30) என்ற பெண் செவிலியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கழிவறைக்கு சென்ற அவர், நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரூபாலி இறந்த நிலையில் இருந்தார். அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக சுகாதாரத் துறையும் தனியாக விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.