இந்தியா

அரசியலுக்கு வந்த பின் முட்டை வீச்சுக்கு அஞ்சுவதா? - மஹுவா மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: விசா​ரணைக்கு காணொலி வாயி​லாக ஆஜராக அனுமதி கோரி திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி மக்​களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தாக்​கல் செய்த மனுவை உச்ச நீதி​மன்​றம் நிராகரித்​துள்​ளது.

சமூக வலை​தளத்​தில் பதி​விட்​ட​தாகக் கூறப்​படும் ஆட்​சேபத்​துக்​குரிய கருத்​துகள் மற்​றும் காணொலிகள் தொடர்​பாக பா.ஜ.க நிர்வாகி அளித்த புகாரின் அடிப்​படை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி. மஹுவா மொய்த்ரா மீது வழக்கு பதி​யப்​பட்​டு, காவல்​துறை விசா​ரணைக்கு நேரில் ஆஜராக உத்​தர​விடப்​பட்​டது.

இந்​நிலை​யில், காணொலி வாயி​லாக ஆஜராக அனு​ம​தி​கோரி மஹுவா மொய்த்ரா தாக்​கல் செய்த மனு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, ஷீல் நாகு ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​தது. விசா​ரணைக்கு காணொலி வாயி​லாக ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று மஹுவா மொய்த்ரா தரப்​பு மூத்த வழக்​கறிஞர் கோபால் கோரிக்கை வைத்தார்.

அதற்கு நீதிப​தி​கள், “நீங்​கள்​(மஹு​வா) அரசி​யலுக்கு வந்​து​விட்ட பின்​னர் முட்டை வீசு​வார்​கள் என பயப்​படு​கிறீர்​களா? மனுதாரரின் இந்த வாதத்தை ஏற்க முடியாது. கொல்​கத்தா உயர்​நீதி​மன்ற உத்​தர​வுப்படி வழக்கு விசா​ரணைக்கு முழு​மை​யாக ஒத்துழைக்க வேண்​டும். ஆகஸ்ட் 14-ம் தேதி விசா​ரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT