காசியாபாத்: உத்தர பிரதேசம் காசியாபாத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் ‘கொரியன் லவ் கேம்’ என்ற ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி கடந்த வாரம் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து அவர்களின் தந்தை கூறும்போது, ”எனது மகள்கள் கொரிய நாடகங்கள், விளையாட்டுகள் மற்றும் ரீல்ஸ் ஆகியவற்றில் தீவிரமாக மூழ்கியிருந்தனர். அதனால் அவர்களிடம் இருந்து செல்போன்களைப் பிடுங்கி வைத்தேன். அது குற்றமா ? செல்போனைப் பறித்ததால் அவர்கள் கோபமாக இருந்தனர். குழந்தைகளின் நலன் கருதி செல்போனைப் பறிப்பது பாவமா ?” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.