இந்தியா

உ.பி.யில் 23-வது மாடியில் இருந்து விழுந்து தந்தை, மகன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

நொய்டா: உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 23வது தளத்தில் ரந்தீப் பத்ரா (41) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் வீட்டின் பால்கனியில் பூச்செடிகளை வளர்த்து வந்தார்.

நேற்று காலை பூஜை செய்வதற்காக ரந்தீப் பத்ரா அவரது மகன் ஆரவ் (11) இருவரும் பால்கனியில் நின்று பூக்களை பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆரவ் கால் வழுக்கி பால்கனிக்கு வெளியே விழுந்து, தொங்கிய நிலையில் சிக்கிக் கொண்டான்.

இதைப் பார்த்து ரந்தீப் மகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவருக்கும் கால் வழுக்கியதால் இருவரும் 23வது மாடியில் இருந்து கீழே விழுந்தனர். விரைந்து சென்ற போலீஸார் தந்தை, மகன் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT