இந்தியா

ஆந்​தி​ரா​வில் ரூ.20 லட்சம் நகைகளை போலீஸில் ஒப்படைத்த தொழிலாளி

என்.மகேஷ்குமார்

பீமாவரம்: ஆந்​தி​ரா​வில் ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள நகைகளு​டன் சாலை​யில் கிடந்த பையை கண்​டெடுத்த தொழிலாளி ஒரு​வர் அதை காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தார்.

ஆந்​திர மாநிலத்​தின் மேற்கு கோதாவரி மாவட்​டம், மன்​டபேட்டா கிராமத்​தைச் சேர்ந்த கிருஷ்ணம் ராஜு என்​பவரின் மகள் ஸ்ரீலே​கா, தனது குடும்​பத்​தா​ருடன் ஒரு திருமண நிகழ்ச்​சிக்​காக லக்​கவரம் கிராமத்​துக்கு ஆட்​டோ​வில் சென்​றார். திருமண வீட்​டுக்​குச் சென்ற ஸ்ரீலே​கா, தன்​னிட​மிருந்து ஒரு பையை காணாத​தால் அதிர்ச்சி அடைந்​தார்.

இதுகுறித்து மன்​டபேட்டா காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அந்​தப் பையில் ரூ.20 லட்​சம் மதிப்​புள்ள தங்க நகைகள் இருந்​த​தாக அவர் தனது புகாரில் குறிப்​பிட்​டிருந்​தார்.

இதற்​கிடை​யில் அந்த வழி​யாக சென்ற விவ​சாய தொழிலாளி லட்​சுமண குமார், அந்​தப் பையை கண்​டெடுத்​துள்​ளார். அவர் வீட்​டுக்கு சென்று பார்த்​த​போது, அதில் நகைகளும் ஸ்ரீலே​கா​வின் ஆதார் அட்​டை​யும் இருந்​துள்​ளது. இரவு நேர​மாகி விட்​ட​தால், மறு​நாள் காலை அந்​தப் பையை காவல் நிலை​யம் கொண்டு சென்று ஒப்​படைத்​தார். இதையடுத்​து, நகைகள் இருந்த அந்​தப் பையை ஸ்ரீலே​கா​விடம் போலீ​ஸார் ஒப்​படைத்​தனர். லட்​சுமண கு​மாரின்​ நேர்​மையை போலீ​ஸாரும்​ ஸ்ரீலே​கா​வும்​ ​பா​ராட்​டினர்​.

SCROLL FOR NEXT