மசூதி கட்ட செங்கல்லுடன் வந்த ஹுமாயூனின் ஆதரவாளர்கள்.

 
இந்தியா

திரிணமூல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்ட அடிக்கல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் முர்​ஷி​தா​பாத்​தின் பரத்​பூர் தொகுதி எம்​எல்ஏ ஹுமாயூன் கபீர். இவர் அயோத்​தி​யில் இடிக்​கப்​பட்ட பாபர் மசூ​தியை போலவே தனது தொகு​தி​யில் மசூதி கட்​டு​வ​தாக அறிவித்​தார்.

அதற்​கான அடிக்​கல் நாட்டு விழா, டிசம்​பர் 6-ம் தேதி நடை​பெறும் என்று கடந்த ஆண்டு தெரி​வித்​தார். இது​போல் அடிக்​கடி சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசி வந்​த​தால், ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து ஹுமாயூன் அண்மையில் நீக்​கப்​பட்​டார். எனினும், திட்​ட​மிட்​டபடி நேற்று டிசம்​பர் 6-ம் தேதி பாபர் மசூதி கட்​டு​வதற்​காக ஹுமாயூன் அடிக்​கல் நாட்​டி​னார்.

முர்​ஷி​தா​பாத்​தின் பெல்​தங்​கா​வில் நடை​பெற்ற விழா​வில், முக்​கிய மவுலா​னாக்​கள் மற்​றும் ஹுமாயூனின் ஆதர​வாளர்​கள், பல்​வேறு மாவட்​டங்​களை சேர்ந்த முஸ்​லிம்​கள் பங்​கேற்​றனர். அவர்​களில் பலர் மசூதி கட்ட செங்​கற்​களை கொண்டு வந்​தனர். இந்​நிகழ்ச்​சி​யால் அசம்​பா​விதங்​கள் நடை​பெறாமல் இருப்​ப​தற்கு முன்​னெச்​சரிக்​கை​யாக முதல்​வர் மம்தா பானர்ஜி அரசு பலத்த போலீஸ் பாது​காப்பு செய்​திருந்​தது.

ஹுமாயூன் கபீர் கூறும்​போது, ‘‘பெல்​தங்​கா​வில் விரை​வில் பாபர் மசூ​தியை திறப்​பேன். மேற்கு வங்க காவல் துறை​யினர் எனக்கு ஆதர​வும் பாது​காப்​பும் அளிக்​கின்​றனர். அவர்​களுக்கு நன்​றி. முஸ்​லிம் சமூகத்​துக்கு எனது மனமார்ந்த வாழ்த்​து​களை தெரி​வித்​துக் கொள்​கிறேன்’’ என்​றார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூகவலைதள பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், ‘‘முதல்​வர் மம்தா பானர்ஜி இந்த நிகழ்வை அரசி​யல் ஆதா​யத்​துக்​காகப் பயன்​படுத்​துகிறார். முர்​ஷி​தா​பாத் வகுப்​பு​வாத ரீதி​யாக மிக​வும் பதற்​றத்​துக்கு உரியது. நிலைமை மோசமடைந்​தால் அது தேசிய நெடுஞ்​சாலை 12-ஐ பாதிக்​கும். மாநிலத்​தின் சட்​டம், ஒழுங்கு மற்​றும் தேசிய பாது​காப்​புக்கு பெரும் அச்​சுறுத்​தலை ஏற்​படுத்​தும்’’ என்று எச்​சரித்​தார்.

மாநில பாஜக மூத்த தலை​வர் திலீப் கோஷ் கூறும்​போது, ‘‘இந்த சம்​பவம் முற்​றி​லும் வாக்கு வங்கி அரசி​யலின் ஒரு பகு​தி’’ என்று கூறினார்.

SCROLL FOR NEXT