புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த மாதவ் காட்கில் (83), ஒரு சூழலியல் ஆய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர். உடல்நலக்குறைவால் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் புதன்கிழமை நள்ளிரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 2024-ல், மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த மிக முக்கியமான பணிக்காக, ஐ.நா. அவருக்கு 'சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்' விருது வழங்கியது.
பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினராகவும், 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 'மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவின்' தலைவராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இக்குழு 'காட்கில் குழு' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.