இந்தியா

தீவிரவாதத்துக்கு நிதி உதவி, சட்டவிரோத ஊடுருவல் வழக்கில் 4 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

செய்திப்பிரிவு

லக்னோ: தீ​விர​வாத நடவடிக்​கைகளுக்கு நிதி வழங்​கியது மற்றும் சட்​ட​விரோத ஊடுரு​வலுக்கு உடந்​தை​யாக இருந்​தது தொடர்​பான பண மோசடி வழக்​கில், நாட்​டின் 4 மாநிலங்​களில் பல இடங்​களில் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் நேற்று அதிரடி சோதனை நடத்​தினர்.

ரோஹிங்​கி​யாக்​கள் மற்​றும் வங்​க தேசத்​தைச் சேர்ந்த வெளிநாட்டினரை இந்​தி​யா​விற்​குள் சட்​ட​விரோத​மாக ஊடுரு​வச் செய்​வது, அவர்​களுக்கு போலி இந்​திய அடை​யாள ஆவணங்களைத் தயாரித்​துத் தரு​வது மற்​றும் நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் அவர்​கள் குடியேற சட்​ட​விரோத​மாக உதவுவது ஆகிய வற்​றில் ஒரு தேச​ விரோத கட்​டமைப்பு செயல்​பட்டு வரு​வதை உ.பி. தீவிர​வாத எதிர்ப்​புப் படை கண்​டறிந்​தது. இதையடுத்​து, கடந்த 2024ம் ஆண்டு உத்​தரப் பிரதேச மாநில தீவிர​வாத எதிர்ப்புப் படை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் இதுதொடர்​பான வழக்கை அமலாக்​கத்​துறை கையில் எடுத்​துள்​ளது.

இது குறித்து அமலாக்​கத் துறை அதி​காரி​கள் தரப்​பில் கூறப்படுவதாவது: சில குறிப்​பிட்ட தொண்டு அறக்​கட்​டளை​கள் மற்​றும் அமைப்​பு​கள் வெளி​நாடு​களில் இருந்து கணிச​மான அளவில் பங்​களிப்​பு​களைப் பெற்​றுள்​ளன. அவ்​வாறு பெறப்​பட்ட வெளி​நாட்டு நிதி, பல்​வேறு வங்​கிக் கணக்​கு​கள், பினாமி கணக்குகள் மற்​றும் பல அடுக்கு பரிவர்த்​தனை​கள் மூலம் மடைமாற்​றப்​பட்​டு, சட்​ட​விரோத நடவடிக்​கைகளுக்​குப் பயன்படுத்தப்பட்​டுள்​ளது.

இத்​தகைய சட்​ட​விரோதப் பணப்​பரி​மாற்​றங்​கள் மற்​றும் தீவிரவாத நிதி உதவி நெட்​வொர்க்கை முழு​மை​யாக முடக்​கும் நோக்​கில் அமலாக்​கத் துறை சோதனை​யில் ஈடு​பட்​டுள்​ளது. பறிமுதல் செய்​யப்​பட்​டுள்ள ஆவணங்​கள் மற்​றும் கணினித் தரவுகளின் அடிப்​படை​யில், இந்​தச் சதித்​திட்​டத்​தில் தொடர்புடைய முக்​கியப் புள்​ளி​களைக் கண்​டறி​யும் நோக்​கில் அமலாக்​கத்​துறை அதி​காரி​கள் தங்​களது விசா​ரணை​யைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

அதன் ஒரு பகு​தி​யாக சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத் தடுப்​புச் சட்டத்​தின் கீழ் அமலாக்​கத்​துறை​யின் லக்னோ மண்டல அலுவலக அதி​காரி​கள், உத்​தரப் பிரதேசம், டெல்​லி, ஹரி​யானா மற்​றும் மேற்கு வங்​கம் ஆகிய நான்கு மாநிலங்​களில் உள்ள சுமார் 13 முக்​கிய இடங்​களில் அதிரடி சோதனை​களை மேற்கொண்டு முக்​கிய ஆவணங்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளனர். இவ்வாறு அந்த அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT