இந்தியா

மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் திரிணமூல் எம்.பி. அபிஷேக்கிடம் அமலாக்கத் துறை விசாரணை

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016-ல் ஆசிரியர்​கள் மற்றும் ஆசிரியர் அல்​லாத ஊழியர்​கள் 25,753 பேர் நியமிக்கப்பட்ட​தில் பெரு​மள​வில் ஊழல் நடந்​த​தாக புகார் எழுந்தது.

இது தொடர்​பாக கொல்​கத்தா உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​படி, 2022-ல் சிபிஐ வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை தொடங்​கியது. அதே ஆண்​டில் சட்​ட​விரோதப் பணப் பரிவர்த்​தனை சட்​டத்​தின் கீழ் அமலாக்​கத் துறை விசா​ரணை தொடங்​கியது.

தகு​தி​யான நபர்​களை புறக்​கணித்​து​விட்​டு, லஞ்​சம் கொடுத்த நபர்​களுக்கு வேலை வழங்​கப்​பட்​ட​தாக அமலாக்​கத்​துறை கூறுகிறது.

இந்த ஊழல் மூலம் திரட்​டப்​பட்ட பணம் எங்கு சென்​றது, யார் யாரெல்​லாம் அதைப் பெற்​றார்​கள், அந்​தப் பணத்தை மறைக்க அல்​லது வேறு கணக்​கு​களுக்கு மாற்ற என்​னென்ன வழிகள் பயன்படுத்​தப்​பட்டன என்​பது குறித்து சிபிஐ, அமலாக்​கத்​துறை ஆகிய இரு அமைப்​பு​களும் தீவிர​மாக விசா​ரிக்கின்​றன.

இந்​நிலை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் தேசிய பொதுச்செய​லா​ள​ரும் டயமண்ட் ஹார்​பர் தொகுதி எம்​.பி.​யு​மான அபிஷேக் பானர்​ஜி​யிடம் அமலாக்​கத் துறை நேற்று விசா​ரணை நடத்​தி​யது. கொல்​கத்​தா​வில் உள்ள அமலாக்​கத்​துறை அலுவலகத்தில் அதி​காரி​கள் அவரிடம் நீண்ட விசா​ரணை நடத்தினர்.

மேற்கு வங்க சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் நியமனம் தொடர்​பான ஆவணங்​களில், எம்​எல்​ஏ-க்​களின் போலி கையெழுத்​துகளை பயன்​படுத்​தி​ய​தாக எழுந்​துள்ள குற்​றச்​சாட்டு தொடர்​பாக அபிஷேக் பானர்​ஜி​யிடம் மாநில குற்​றப் புல​னாய்​வுத் துறை (சிஐடி) அதி​காரி​கள் நேற்று முன்​தினம் சுமார் எட்​டரை மணி நேரம் விசா​ரணை நடத்​தினர். இதற்கு அடுத்த நாளே அவரிடம் அமலாக்​கத்​துறை விசா​ரணை நடத்​தி​யுள்​ளது.

இந்த ஊழல் தொடர்​பாக கடந்த 2022 ஜூலை 23-ம் தேதி நடந்த சோதனை​யில் மேற்கு வங்க முன்​னாள் கல்வி அமைச்​சர் பார்த்தா சாட்​டர்​ஜி​யின் நெருங்​கிய உதவி​யாள​ரான அர்​பிதா முகர்​ஜி​யின் இல்​லத்​தில் இருந்து ரூ.50 கோடிக்கு மேல் ரொக்​கப் பணம், ரூ.4.5 கோடி மதிப்​புள்ள தங்க நகைகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இதையடுத்து பார்த்தா சாட்​டர்​ஜியை அமலாக்​கத்​துறை கைது செய்​தது. இந்த வழக்​கில் தற்​போது வரை 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT