இந்தியா

கச்சா எண்ணெய் கொள்முதலில் எரிசக்தி பாதுகாப்புக்கு முன்னுரிமை: மத்திய அரசு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்கள் கொள்முதலை பொறுத்தவரை, 140 கோடி இந்தியர்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் உயர் முன்னுரிமையாக இருக்கும் என்று அரசு பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக கூறியுள்ளது.

இந்தியாவுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் சந்தை நிலவரமும் சர்வதேச சூழலும் நமது உத்தியின் அடிப்படையாக இருக்கும். இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் இதை கருத்தில் கொண்டே எடுக்கப்படுகின்றன. இனியும் அவ்வாறே எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

          
SCROLL FOR NEXT