பிரதிநிதித்துவப் படம்

 
இந்தியா

“மின் கட்டண உயர்வை பாசிட்டிவ் ஆக எடுத்துக் கொள்வீர்” - உ.பி. மக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

வெற்றி மயிலோன்

லக்னோ: மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதை மக்கள் பாசிட்டிவ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் நரேந்திர காஷ்யப் தெரிவித்தார்.

மேற்காசிய போர் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் 'எரிபொருள் மற்றும் மின் கொள்முதல் சரிசெய்தல் கூடுதல் கட்டணம்' (FPPAS) ஆகியவற்றின் காரணமாக, ஜூன் மாதத்தில் மின் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹாபூரில் செய்தியாளர்களிடம் பேசிய உ.பி. அமைச்சர் நரேந்திர காஷ்யப், “முதல்வர் யோகியின் தலைமையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் எந்த வரிகளும் அல்லது கட்டணங்களும் உயர்த்தப்படவில்லை. ஆனால், மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடி குறித்து அனைவருக்கும் தெரியும். இத்தகைய சூழலில், அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் அதை பாசிட்டிவ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT