இந்தியா

தலைமைத் தேர்தல் ஆணையர் 48 மணி நேரத்​தில் பதவி விலகாவிட்டால் நாடு முழு​வதும் போராட்​டம்: அபிஜித் திப்கே எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்​தல் ஆணை​யர்​களுக்கு இடையே கருத்து வேறுபாடு நில​வுவ​தாக முன்​னணி ஆங்​கில நாளிதழ் செய்தி வெளி​யிட்​டது. இதையடுத்​து, தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்தை எதிர்க்​கட்​சிகள் கடுமை​யாக விமர்​சித்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே டெல்​லி​யில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்​போது, “தலை​மைத் தேர்​தல் ஆணையர் (சிஇசி) ஞானேஷ் குமார் அடுத்த 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்​டும். இல்​லா​விட்​டால் டெல்​லி​யில் மட்​டுமல்​லாது நாடு முழு​வதும் தர்ணா போராட்​டம் நடத்​தப்​படும்” என்​றார்.

சிஜேபி இணை நிறுவனர் சவுரவ் தாஸ் கூறும்​போது, “தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்​டும். இனி நடை​பெறவுள்ள அனைத்து தேர்​தல்​களையும் நிறுத்​திவைக்க வேண்​டும்.

எஸ்​ஐஆர் அடிப்​படையி​லான வாக்​காளர் பட்​டியலை நிறுத்​தி​வைத்​து​விட்​டு, முந்​தைய வாக்​காளர் பட்​டியலை பயன்​படுத்த வேண்​டும். எஸ்​ஐஆர் தொடர்​பான கோப்​பு​களை உச்ச நீதி​மன்​றத்​தின் தலை​மையி​லான குழு​வின் பாது​காப்​பில் வைக்க வேண்​டும். தேர்​தல் ஆணை​யர்​களை நியமிப்​பது தொடர்​பான சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும்” என்றார்.

SCROLL FOR NEXT