இந்தியா

சாட்ஜிபிடி உதவியால் குடும்பத்துடன் இணைந்த முதியவர்

செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்​சாபின் லூதி​யானா மாவட்​டம், பதேகர் குஜ்ரன் கிராமத்​தைச் சேர்ந்​தவர் சமன் லால் (72). கடந்த 11-ம் தேதி அமிர்​தசரஸ் பொற்​கோ​யிலுக்கு குடும்​பத்​தினரு்டன் சென்​றார்.

நீண்டகால​மாக சமன் லால் ஞாபக மறதி பிரச்​சினை​யால் பாதிக்கப்​பட்டு உள்​ளார். அமிர்​தசரஸ் பயணத்​தி்ல் எதிர்​பா​ராத​வித​மாக அவர் குடும்​பத்​தி னரை விட்டு பிரிந்​தார். அவரிடம் மொபைல்போனும் கிடை​யாது. இதனால் அவரை தேடி கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை.

ஞாபக மறதி காரண​மாக வழிதெரி​யாத சமன் லால் ரயில் ஏறி பிஹாரின் கயா பகு​திக்​குச் சென்​றார். சுமார் 1,200 கி.மீ.க்கு அப்பால் அவர் தனது குடும்​பத்தை தேடி அலைந்​தார். சில நாட்களுக்கு முன்பு கயாவை சேர்ந்த இளைஞர் நீரஜிடம் சமன்லால் உணவு் கேட்​டார். முதி​ய​வரின் பரி​தாப நிலையை அறிந்த நீரஜ், அவரை தனது வீட்​டுக்கு அழைத்​துச் சென்று தங்கவைத்​தார்.

பஞ்​சாபி மொழி மட்​டுமே பேசிய சமன் லால் தனது கிராமத்​தின் பெயரை (பதேகர் குஜ்ரன்) மட்​டும் கூறி​னார். அந்த கிராமம் எங்கிருக்​கிறது என்று சாட்ஜிபிடி மூலம் நீரஜ் தேடி பஞ்​சாபின் லூதியானா மாவட்​டத்​தில் இருப்​பதை கண்​டு​பிடித்​தார்.

சமன்​லாலை தனி​யாக அனுப்ப முடி​யாது என்​ப​தால் அவரும் பஞ்சாபுக்கு புறப்​பட்டு, சமன் லாலின் குடும்​பத்​தினரை கண்​டு​பிடித்​தார். குடும்​பத்​தினர் மட்​டுமன்றி ஒட்​டுமொத்த கிராம மக்களும் சமன்லாலை உற்​சாக​மாக வரவேற்​று இளைஞர் நீரஜுக்கு நன்​றி தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT