இந்தியா

ஜார்க்கண்டில் வங்கி ஊழியரின் அலட்சியத்தால் முதியவர் உயிரிழப்பு: வங்கியின் முன்பு சடலத்துடன் பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ரத்​தன் லக்​ரா. பழங்​குடி இனத்​தைச் சேர்ந்த இவர் அங்​குள்ள ஜார்க்​கண்ட் கிராமீன் வங்​கி​யில் சேமிப்​புக் கணக்கு வைத்திருந்தார். மேலும் அரசிட​மிருந்து வரும் பென்​ஷன் பணமும் அந்த வங்​கிக் கணக்​கிலேயே சேர்ந்து வந்​தது.

இந்​நிலை​யில் ரத்​தன் லக்​ரா​வுக்கு உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​டது. இதனால் சிகிச்சை பெறு​வதற்கு பணம் தேவைப்​பட்ட நிலை​யில் ரத்​தன் லக்​ரா​வின் வங்​கிக் கணக்​கி​லிருந்து பணம் எடுக்க அவரது உறவினர்கள் ஆம்​புலன்​ஸில் அழைத்து வந்​துள்​ளனர். ஆனால் கேஒய்சி விவரங்​களை (வாடிக்​கை​யாளர் சுய​விவரக்​குறிப்​பு) அப்டேட் செய்​யாத​தால் பணத்தை எடுக்க முடி​யாது என்று வங்கி மேலா​ளர் தெரி​வித்து விட்​டார்.

இதையடுத்து ரத்​தன் லக்​ரா​வின் கேஒய்சி விவரங்​களுக்​கான ஆவணங்​கள் தரப்​பட்​டன. ஆனால் அப்​போதும் பணம் அவருக்கு தரப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்டு சிகிச்சை பெற்று வந்த ரத்​தன் லக்ரா நேற்று முன்தினம் உயி​ரிழந்​தார். இதையடுத்து கோபமடைந்த அவரது உறவினர்​கள் ரத்​தன் லக்​ரா​வின் சடலத்​துடன் வங்கி வளாகத்துக்கு வந்து ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். சிகிச்​சைக்கு பணம் இல்​லாத நிலை​யில் தரமான சிகிச்சை வழங்க இயலவில்லை. வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் ரத்​தன் இறந்து​விட்​டார் என அவர்​கள் குற்​றம்​சாட்​டினர்.

இதுகுறித்து ரத்​தன் மரு​மகள் புல்​மனி டாப்போ கூறும்போது, “எங்கள் மாம​னாரின் பணத்தை வாங்​கு​வதற்​காக இந்த வங்கியின் ஒவ்​வொரு அதி​காரி​யிட​மும் கையெழுத்து வாங்கினோம். அந்த ஆவணம் கொடு, இந்த ஆவணம் கொடு என்று எங்​களை அலைய வைத்​தனர். கேஒய்சி விவரங்​கள் கொடுத்த பின்​னரும் பணம் தராமல் இழுத்​தடித்​தனர். தரமான சிகிச்சை கிடைக்​காமல் அவர் இறந்​து​விட்​டார்” என்றார்.

இதுகுறித்து வங்கி அதி​காரி விகாஸ்​கு​மார் கூறும்​போது, “கேஒய்சி விவரங்​களை பெற்ற பின்​னர் ரத்​தன் உறவினர்​கள் யாரும் வங்கிக்கு வரவில்​லை. அவர் இறந்த பின்​னரே வந்து ஆர்ப்​பாட்​டம் செய்​துள்​ளனர்” என்​றார்.

SCROLL FOR NEXT