இந்தியா

கேரளாவில் மட்டத்தூர் பஞ்சாயத்தை கைப்பற்ற பாஜகவுடன் கைகோத்த 8 காங்கிரஸ் கவுன்சிலர்கள்

செய்திப்பிரிவு

திருச்சூர்: கேரளா​வில் மட்டத்தூர் பஞ்​சா​யத்தை கைப்​பற்ற காங்​கிரஸ் கவுன்​சிலர்​கள் 8 பேர், கட்​சி​யில் இருந்து விலகி பாஜக​வுடன் கைகோத்தனர்.

கேரளா​வின் திருச்​சூர் மாவட்​டத்​தின் மட்டத்தூர் பஞ்​சா​யத்து தேர்​தல் முடிவு​கள் வெளி​யா​யின. மொத்​தம் 24 உறுப்​பினர்​கள் கொண்ட பஞ்​சா​யத்​தில் இடது ஜனநாயக முன்​னணி (எல்​டிஎப்) 10 இடங்​களி​லும், காங்கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (யுடிஎப்) 8 இடங்​களி​லும், தே.ஜ கூட்​டணி 4 இடங்​களி​லும், சுயேச்சை 2 இடங்​களி​லும் வென்​றன.

காங்​கிரஸ் கட்சிக்கு எதி​ராக சுயேச்​சை​யாக போட்​டி​யிட்டு வென்ற கே.ஆர். ஓசெப்​புக்கு ஆதர​வளிக்க ஐக்​கிய ஜனநாயக முன்​னணி முடிவு செய்​திருந்​தது. ஆனால் தேர்​தலுக்கு முன்​பாக ஓசெப் இடது ஜனநாயக முன்​னணி​யுடன் கூட்டு சேர்ந்​தார். இது காங்​கிரஸ் தலை​வர்​களை அதிர்ச்​சிக்​குள்​ளாக்​கியது.

இதனால் கோபம் அடைந்த காங்​கிரஸ் உறுப்​பினர்​கள் 8 பேரும் தங்​கள் கட்சி பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, மட்டத்தூர் பஞ்​சா​யத்தை கைப்​பற்ற பாஜக.,வுடன் கூட்டு சேர்ந்​தனர். தற்​போது பாஜக ஆதர​வுடன் காங்​கிரஸ் கட்​சி​யில் போர்க்கொடி தூக்​கிய டெய்ஸி ஜோசி புதிய பஞ்​சா​யத்து தலை​வ​ராகி​யுள்​ளார். இவரது தலை​மை​யில் தற்​போது புதிய அணி உரு​வாகி​யுள்​ளது. இதன் மூலம் மட்டத்தூர் பஞ்​சா​யத்​தில் 23 ஆண்டு கால கம்​யூனிஸ்ட் ஆட்​சிக்கு முடிவு கட்​டப்​பட்​டுள்​ளது.

ராஜி​னாமா செய்த 8 காங்​கிரஸ் கவுன்​சிலர்​களும், விசு​வாச​மான தொண்​டர்​களை, உள்​ளூர் காங்​கிரஸ் தலை​வர்​கள் கண்​டு​கொள்​வ​தில்லை என குற்​றம் சாட்​டி​யுள்​ளனர். கேரளா​வில் ஏற்​பட்​டுள்ள இந்த நிலை காங்​கிரஸ் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளுக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

கங்​கிரஸில் போர்க்கொடி தூக்​கிய​வர் பாஜக ஆதர​வுடன் பஞ்​சா​யத்து தலை​வ​ராகி யாரும் எதிர்​பா​ராத புதிய கூட்​ட​ணியை உரு​வாக்​கி​யுள்​ளார். உட்​கட்சி பிரச்​சினை​களை தீர்க்க காங்​கிரஸ் நடவடிக்கை எடுக்​க​வில்லை என்​றால், மட்டத்தூர் பஞ்​சா​யத்​தில் ஏற்​பட்ட நிலை பிற இடங்​களி​லும் தொடரும்​ என திருச்​சூர்​ காங்​கிரஸ்​ தொண்​டர்​கள்​ கூறுகின்​றனர்​.

SCROLL FOR NEXT