இந்தியா

அனில் அம்பானி மகனிடம் 2-ம் நாளாக விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அனில் அம்​பானி தலை​மையி​லான ரிலை​யன்ஸ் குழு​மத்​துக்கு யெஸ் வங்கி கடந்த 2017-ம் ஆண்டு ரூ.6,000 கோடி கடன் வழங்​கியது.

ஒரே ஆண்​டில் இத்​தொகை ரூ.13,000 கோடி​யாக உயர்ந்​தது. இதில் பெரும்​பாலான தொகை வராக் கடனாக மாறியது. இதனால் யெஸ் வங்​கிக்கு ரூ.3,300 கோடி இழப்பு ஏற்​பட்​டது.

இந்த மோசடி தொடர்​பாக அனில் அம்​பானி​யிடம் அமலாக்​கத்​துறை ஏற்​கெனவே விசா​ரணை நடத்​தி​யது. இந்​நிலை​யில் அவரது மகன் அன்​மோல் அம்​பானி​யிடம் (34) வங்கி கடன் மோசடி தொடர்​பாக அமலாக்​கத்​துறை நேற்று இரண்​டாவது நாளாக வி​சா​ரணை நடத்​தி​யது.

SCROLL FOR NEXT