இந்தியா

எஸ்ஐஆர் பணியில் மேற்கு வங்க அதிகாரிகள் 7 பேர் இடைநீக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மே.வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. இப்​பணிக்கு முதல்​வர் மம்தா தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் அரசு எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. எஸ்​ஐஆருக்கு எதி​ரான வழக்கை உச்ச நீதி​மன்​றம் விசா​ரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் எஸ்​ஐஆர் தொடர்​பாக தவறான நடத்​தை, கடமை தவறு​தல் மற்​றும் சட்​டப்​பூர்வ அதி​காரங்​களை தவறாக பயன்​படுத்​துதல் ஆகிய காரணங்​களுக்​காக உதவி தேர்​தல் பதிவு அதி​காரி​கள் (AEROs) மட்​டத்​தில் உள்ள மே.வங்க அதி​காரி​கள் 7 பேரை உடனடி​யாக இடைநீக்​கம் செய்ய தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. மேலும் இவர்​களுக்கு எதி​ராக ஒழுங்கு நடவடிக்கை தொடங்​கப்​படு​வதை உறுதி செய்​யு​மாறு மே.வங்க தலை​மைச் செய​லா​ள​ருக்கு ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

          
SCROLL FOR NEXT