இந்தியா

எபோலா பரவல் கண்காணிப்புக்கு புதிய போர்டல் - விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆப்​பிரிக்​கா​வின் சில பகு​தி​களில் எபோலா பரவி வரு​வ​தால் பொது சுகா​தார கண்​காணிப்பை பலப்​படுத்த மத்​திய விமானப் போக்​கு​வரத்து அமைச்​சக​மும் டெல்லி சர்​வ​தேச விமான நிலை​ய​மும் இணைந்து பயணி​கள் சுகா​தார சுய அறிவிப்பு போர்​டலை அறி​முகப்​படுத்தி உள்​ளன.

சுகா​தார சேவை​கள் இயக்​குநரகம் மற்​றும் மத்​திய சுகா​தார அமைச்​சகத்​துடன் இணைந்து உரு​வாக்​கப்​பட்ட ஏர் சுவிதா 2.0 என்ற இந்த போர்​டல் மூலம், இந்​தி​யா​வுக்கு வரும் சர்​வ​தேச பயணி​கள், குடியேற்ற அனு​ம​திக்கு முன்​பு, கடந்த 21 நாட்​களின் பயணம், தொடர்பு வரலாறு மற்​றும் அறிகுறிகள் உள்​ளிட்ட விவரங்​களை ஆன்​லைனில் கட்​டாய​மாக சமர்ப்​பிக்க வேண்​டும்.

இந்த இணை​ய தளம் விமான நிலைய சுகா​தார அதி​காரி, குடியேற்​றப் பிரிவு மற்​றும் மாநிலக் கண்​காணிப்பு அதி​காரி​கள் ஆகியோ​ருடன் நிகழ்​நேரத் தரவுப் பகிர்​வைச் சாத்தியமாக்குகிறது. அதேவேளை​யில், விமானம் தரை​யிறங்​கிய பிறகு பூர்த்தி செய்ய வேண்​டிய காகிதப் படிவங்​கள் ஏது​மின்​றி, பயணி​களின் வருகை அனுபவத்​தைச் சுமுக​மாக​வும் தொடுதலின்றி மேற்கொள்ள​வும், ஆபத்து வாய்ப்​புள்ள பயணிகளை விரை​வாக அடை​யாளம் கண்டு பரிந்​துரைக்​க​வும் இது உதவு​கிறது என்று சுகா​தார அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

இந்த படிவத்தை இந்​தியா வரு​வதற்கு 24 மணி நேரத்​துக்கு முன்பே நிரப்​பலாம். பயணி​கள் விமானத்​தில் ஏறும் முன்பே அல்லது வெப் செக்​-இன் நேரத்​தில் இதை நிரப்ப வேண்​டும் என்றும், வந்​ததும் அச்​சிடப்​பட்​ட/ ட​வுன்​லோடு செய்​யப்​பட்ட படிவத்தை காட்​டி​னால் போதும் என்​றும்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT