இந்தியா

பெங்களூருவில் ரூ.15 கோடி போதைப் பொருள் பறிமுதல்: வெளிநாட்டவர் உட்பட 17 பேர் கைது

செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்​களூரு​ மாநகர எல்​லைக்​குட்​பட்ட பானஸ்​வாடி காவல் நிலை​யத்​துக்​குட்​பட்ட கம்​மனஹள்​ளி​யில் கார் நிறுத்​தும் பகு​தி​யில் போதைப் பொருள் விற்​பனை செய்​யப்​படு​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்து மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் போதைப்​பொருள் தடுப்​புப் பிரி​வினருடன் இணைந்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

அப்​போது 3 பேர் போதைப் பொருளை காரில் பதுக்கி விற்​பனை செய்​வது தெரியவந்தது. அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை​யின் அடிப்​படை​யில் 3 இடங்​களில் மொத்​த​ம் 13.13 கிராம் எம்​டிஎம்ஏ போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இது த​விர இந்​திரா நகர், அசோக் நகர், கோரமங்​களா உள்​ளிட்ட இடங்​களில் நடத்​திய சோதனை​யில் 181 கிராம் கோகைன், 59.32 கிலோ கஞ்​சா, 7 கிலோ ஓப்​பி​யம் ஆகியவை பறி​முதல் செய்யப்பட்​டன. இவற்றின் மதிப்பு ரூ.15 கோடி. இது தொடர்​பாக 8 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன.

இந்த வழக்​கு​களில் வெளி​நாட்டை சேர்ந்த ஒரு​வர் உட்பட 17 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அதில் 6 பேர் வெளி​ மாநிலங்​களை சேர்ந்தவர்​கள், 10 பேர் பெங்​களூருவை சேர்ந்​தவர்​கள் என்​பது தெரிய ​வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT