இந்தியா

“இளைஞர்கள் வாழ்வை போதை சீரழிக்கும்” - விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி பிரதமர் மோடி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தற்​காலிக கிளர்ச்சி தரும் போதை இளைஞர்​களின் ஒட்​டுமொத்த வாழ்க்​கை​யை​யும் எதிர்​காலத்​தை​யும் சீரழித்​து​விடும் என பிரதமர் நரேந்​திர மோடி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யாவை உரு​வாக்​கும் இலக்​கின் ஒருபகுதியாக, போதை​யில்லா பாரதத்​துக்​கான இளைஞர் உறு​தி​மொழி பிரச்​சா​ரத்தை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: நாட்​டின் எதிர்​காலம் இளைஞர்​களின் கைகளில்​தான் உள்​ளது என்பதை நன்கு உணர்ந்​துள்ள எதிரி நாடு​கள், தங்​களின் தீவிரவாதச் செயல்​களின் ஒருபகு​தி​யாக போதைப்​பொருள் விநி​யோகத்​தைப் பயன்​படுத்தி அவர்​களை அழிக்​கும் வேலை​யில் ஈடுபடு​கின்றன.

போதைப்​பொருள் உங்​களுக்​குச் சிறிது நேரக் கிளர்ச்​சி​யைத் தரலாம்; ஆனால் அது உங்​களின் ஒட்​டுமொத்த தொழில், வாழ்க்கை​யை அடியோடு சீரழித்​து​விடும். 'வளர்ச்​சி​யடைந்த இந்தி​யா' என்ற இலக்கை அடைய, நமது இளைஞர்​கள் மனதளவிலும் உடலள​விலும் ஆரோக்​கிய​மாக​வும் தன்னம்பிக்கையுட​னும் இருக்க வேண்​டியது அவசி​யம்.

போதைப்​பொருள் பழக்கத்திலிருந்து மீண்டு வெளியே வருபவர்​கள் உண்​மை​யான போராளிகள். அவர்​களை அவமானப்​படுத்​தாமல் கவுர​வித்​து வாழ்க்​கை​யில் இரண்​டாவது வாய்ப்பை வழங்க வேண்​டும். போதைப் பழக்​கம் ஒரு தாயின் புன்​னகை​யைப் பறிக்​கிறது; தந்​தை​யின் கனவு​களைத் தகர்க்​கிறது; சகோ​தரி​யின் நம்​பிக்​கை​யைத் தளர்த்​துகிறது. தன் கண் முன்​னேயே குழந்தை சீரழி​வதைப் பார்த்து ஒவ்​வொரு குடும்​ப​மும் இந்த வலியை அனுபவிக்​கிறது.

போதைக்கு அடிமை​யான பிள்​ளை​களை மறைக்​காமல், அவர்களிடம் திறந்​தமனதுடன் பேசி, மருத்​துவ உதவி​களைப் பெற்றுத்தர குடும்​பத்​தினர் முன்வர வேண்​டும். இந்த விழிப்​புணர்வு பிரச்​சா​ரம் அடுத்த 100 வாரங்​களுக்​குத் தொடர்ந்து நடை​பெறும். ஒவ்​வொரு ஞாயிற்​றுக்​கிழமை​யும் கலை, விளை​யாட்​டு, தியானம், ஆன்​மீகம், சேவை சார்ந்த பல விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நாடு முழு​வதும் நடத்​தப்​படும். வரவிருக்​கும் 100 ஞா​யிற்​றுக்​கிழமை​களும் போதை​யில்லா இந்​தி​யாவை நோக்கி வைக்​கப்​படும் 100 வலு​வான அடிகளாக அமை​யும்​. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசி​னார்​.

SCROLL FOR NEXT