பிரதமர் மோடி | கோப்புப்படம்
புது டெல்லி: போதைப்பொருள் பழக்கம் நமது இளைஞர்களின் கனவுகளுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
140வது மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய பிரதமர், “நமது இளைஞர்களின் கனவுகளுக்கு போதைப்பொருள் பழக்கம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. நாடு முழுவதும், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான போராட்டம் சமூகத்தில் தீவிரமடைந்து வருவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ‘போதையில்லா இளைஞர் பிரச்சாரம்’ நாடு முழுவதும் நடந்து வருகிறது.
போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக இன்று நாம் காணும் நாடு தழுவிய பிரச்சாரம் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமுதாயத்திற்கானது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது தேசத்திற்கானது. இந்த இயக்கத்தின் பெயர் 'போதையில்லா இளைஞர்கள்' முயற்சி, இந்த முயற்சி அதன் உறுதியை தெளிவுபடுத்துகிறது.
தேசம் வளர்ந்த பாரதமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், நமது இளைஞர்களின் உடலும், மனமும் ஆரோக்கியமாகவும், தன்னம்பிக்கையுடன், போதைப் பழக்கத்திலிருந்து என்றென்றும் விடுபடுவதும் அவசியம். இதுவே பிரச்சாரத்தின் நோக்கம். நமது இளைஞர்கள் போதைப்பொருள் மற்றும் அடிமைத்தனத்தின் ஆபத்துகளைப் புரிந்துகொண்டு, விழிப்புடன் இருக்கவும், இந்த அழிவுப் பழக்கத்திலிருந்து விலகி இருக்கவும் உறுதி ஏற்க வேண்டும்.
சில பணிகளை தனித்தனியாக மேற்கொள்ளும் போது, சில சமயங்களில் விரக்தி, சோர்வு மற்றும் நீண்ட தூரத்தை கடக்க தயக்கம் ஏற்படும். ஆனால் அவை கூட்டு பிரச்சாரமாக மாறி, லட்சக்கணக்கான மக்கள் தோளோடு தோள் சேர்ந்து அணிவகுத்துச் செல்லும் போது, தனியாக போராட முடியாதவர்களும் கூட, ஆற்றலின் எழுச்சியுடன் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.