கோப்புப்படம்

 
இந்தியா

குறுகிய தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனை வெற்றி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: குறுகிய தூர இலக்​கைத் தாக்கி அழிக்​கும் ஏவு​கணை சோதனை வெற்​றிகர​மாக நடை​பெற்​றுள்​ளது.

ராணுவத்​துக்​குத் தேவையான ஏவு​கணை​கள், துப்​பாக்கிகள் உட்பட பல்​வேறு ஆயுதங்களை பாது​காப்​புத் துறை ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்​டுக் கழகம் (டிஆர்​டிஓ) தயாரித்து வரு​கிறது. அந்த வகை​யில் தற்​போது குறுகிய தூர எதிரி இலக்​கு​களை துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும் ஏவு​கணை சோதனை ஒடிசா மாநிலம் சந்​திப்​பூர் கடல் பகு​தி​யில் நேற்று வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​டது.

          

‘விஷார்ட்​ஸ்’ என்று அழைக்​கப்​படும் இந்த வகை ஏவு​கணை உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​பட்​டது. இந்த ஏவு​கணையை மனிதர்​கள் எளி​தாக சுமந்து செல்ல முடி​யும். இதை டிஆர்​டிஓ.​வின் இம்​ராத் ஆய்வு மையம், மற்ற டிஆர்​டிஓ ஆய்வு மையங்​கள், இந்​திய தொழிற்​துறை நிறு​வனங்​களு​டன் இணைந்து உரு​வாக்கி உள்​ளது.

இதுகுறித்து மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘குறுகிய தூர எதிரி இலக்​கைத் துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும் 3 ஏவு​கணை​கள் சோதனை செய்​யப்​பட்​டன. அவை மிகத் துல்​லிய​மாக செயல்​பட்டு இலக்கை அழித்​தது.

இந்த சோதனை முழு வெற்றி பெற்​றுள்​ளது. இதன் மூலம், வெவ்​வேறு வேகத்​தில், வெவ்​வேறு உயரத்​தில் பறந்து வரும் எதிரி​களின் விமானம், ஏவு​கணை, ட்ரோன்​கள் என எது​வாக இருந்​தா​லும், நமது குறுகிய தூர வான் பாது​காப்பு ஏவு​கணை துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும்’’ என்று தெரி​வித்​துள்​ளது.

இந்த சோதனை​யின் போது அதிவேக​மாக பறந்து வந்த வான் இலக்​கு​களை குறுகிய தூர வான் பாது​காப்பு ஏவு​கணை​கள் தாக்கி அழித்​துள்​ளன. இந்த சோதனை வெற்றி பெற்​றதற்கு டிஆர்​டிஓ விஞ்​ஞானிகளுக்​குப் பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பாராட்​டும் வாழ்த்​தும் தெரி​வித்​துள்​ளார். விரை​வில் இந்த வகை ஏவு​கணை​கள்​ ராணுவத்​தில்​ இணைக்​கப்​பட உள்​ளன.

SCROLL FOR NEXT