இந்தியா

தானம் பெறப்பட்ட இதயம் வந்தே பாரத் ரயில் மூலம் 2 மணி நேரத்தில் 250 கி.மீ தூரம் பயணித்து வெற்றிகரமாக பொருத்தம்

செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத் நகரில் உள்ள யுஎன் மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​தில் ஒரு​வருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேற்று முன்​தினம் திட்​ட​மிடப்​பட்​டது.

இதற்​காக சூரத் நகரில் உறுப்பு தானம் செய்த ஒரு​வரிட​மிருந்து பெற்ற இதயத்தை 250 கி.மீ தூர​முள்ள அகம​தா​பாத்​துக்கு வந்தே பாரத் ரயி​லில் விரை​வாக கொண்டு செல்ல திட்​ட​மிடப்​பட்​டது. அகம​தா​பாத் ரயில் நிலை​யத்​தில் இருந்து மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​துக்கு கொண்டு செல்​ல​வும் சிறப்பு வழித்​தடம் உரு​வாக்​கப்​பட்​டது.

இதற்​கான ஏற்​பாடு​களில் மருத்​து​வக் குழு​வினர், ரயில்வே துறை​யினர், ரயில்வே பாது​காப்பு படை போலீ​ஸார், குஜ​ராத் போலீ​ஸார் ஆகியோர் ஈடு​பட்​டனர்.

வழக்​க​மாக சூரத் நகரில் இருந்து காலை 8.58 மணிக்கு புறப்​படும் வந்தே பாரத் ரயில், அகம​தா​பாத்​துக்கு காலை 11.30 மணிக்கு வந்​தடை​யும். ஆனால் நேற்று முன்​தினம் வந்தே பாரத் ரயில் 2 மணி நேரத்​தில் 250 கி.மீ பயணம் செய்து அகம​தா​பாத் சென்​றது. அகம​தா​பாத் ரயில்​நிலை​யத்​தில் முதல் நடைமேடையி​லிருந்து தானம் பெறப்​பட்ட இதயம் உடனடி​யாக யுஎன் மேத்தா இதய​வியல் ஆராய்ச்சி மையத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்டு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்​கொண்​ட​வருக்கு வெற்​றிகர​மாக பொருத்​தப்​பட்​டது.

இந்​திய ரயில்வே வரலாற்​றில் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க நிகழ்​வாக, தான​மாகப் பெறப்​பட்ட இதயம் ஒன்று சூரத்​தில் இருந்து அகம​தா​பாத்​திற்கு 250 கி.மீ தூரம் அதிவேக​மாக எடுத்​துச் செல்​லப்​பட்டு வெற்​றிகர​மாக பொருத்​தப்​பட்​டுள்​ளது.

இச்​சம்​பவத்தை சேவை​யின் தனித்​து​வ​மான உதா​ரணம் என குஜராத் முதல்​வர் புபேந்​திர படேல் தெரி​வித்​துள்​ளார்.

அகம​தா​பாத் ரயில்வே கோட்ட மேலா​ளர் வேத் பிர​காஷ் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட செய்​தி​யில் ” இது இந்​திய ரயில்​வேக்கு ஒரு பெருமை மற்​றும் மனநிறைவை அளித்த தருணம். இந்​திய ரயில்வே வரலாறு படைத்​துள்​ளது. முதன்​முறை​யாக, மும்பை சென்ட்​ரல்​-​காந்​திநகர் வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ், தான​மாகப் பெறப்​பட்ட ஒரு இதயத்​தைச் சூரத்​தில் இருந்து அகம​தா​பாத்​திற்கு வெற்​றிகர​மாகக்​ கொண்​டு சேர்த்​துள்​ளது” என தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT