தொகுதி வரையறை மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் மக்களவைக்கு நேற்று கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: நல்ல விஷயங்கள் நடக்கும் போது தீய சக்திகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள கண் திருஷ்டிக்காக கருப்பு பொட்டு வைப்பது வழக்கம். தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நல்ல நேரத்தில் மசோதாக்கள் மீதான கண் திருஷ்டியை போக்கும் வகையில் எதிர்க்கட்சி (திமுக) எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.