பிரதமர் மோடி

 
இந்தியா

யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்ற தீபாவளி: பிரதமர் மோடி வரவேற்பு

வெற்றி மயிலோன்

சென்னை: யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் தீபாவளிப் பணிடிகை சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற யுனெஸ்கோவின் கூட்டத்தில், யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளிப் பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்தார்.

இதனை வரவேற்று பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

எங்களைப் பொறுத்தவரை, தீபாவளி நமது கலாச்சாரம் மற்றும் வாழ்வியலுடன் மிகவும் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. இது நமது நாகரிகத்தின் ஆன்மா. இது வெளிச்சத்தையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது.

யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது இத்திருவிழாவின் உலகளாவிய பிரபலத்துக்கு மேலும் பங்களிக்கும். ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நம்மை என்றென்றும் வழிநடத்தட்டும்.” எனத் தெரிவித்துள்ளார்

SCROLL FOR NEXT