மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ஜிதேந்திர சிங், சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். படம்: பிடிஐ

 
இந்தியா

நாடு முழுவதும் சிஜேபி போராட்டம் எதிரொலி: அமைச்சர் தர்மேந்திர பிரதான் விலகல் - முழு விவரம்

மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்​சி​யின் போராட்​டம் தீவிரமடைந்​ததை அடுத்​து, மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நேற்று ராஜி​னாமா செய்​தார். அக்​கட்​சி​யின் மற்ற கோரிக்​கைகளை​யும் நிறைவேற்​று​வ​தாக மத்​திய அரசு உறுதி அளித்​த​தால், டெல்லி ஜந்​தர் மந்​தரில் நடத்​திவந்த போராட்​டத்தை வாபஸ் பெற்​றனர்.

நாடு முழு​வதும் மருத்​துவ இளநிலைப் படிப்​பு​களில் மாணவர் சேர்க்​கைக்​கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நடத்​தப்​பட்​டது. இத்​தேர்​வின் வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, ஜூன் 21-ம் தேதி நீட் மறு​தேர்வு நடத்​தப்​பட்​டு, கடந்த 16-ம் தேதி இரவு தேர்வு முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன. இதற்​கிடையே, வினாத்​தாள் கசிவுக்கு காரண​மானவர்​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், வினாத்​தாள் கசிவு விவ​காரத்​துக்கு பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி வில​கக் கோரி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்​பில் கடந்த ஜூன் 20-ம் தேதி டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டம் தொடங்​கப்​பட்​டது. சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் சோனம் வாங்​சுக்​கும் இப்​போ​ராட்​டத்​தில் இணைந்து கால​வரையற்ற உண்​ணா​விரதத்தை தொடங்​கி​னார். தொடர் உண்​ணா​விரதம் காரண​மாக உடல்​நிலை மோசமடைந்​த​தால், அவரை டெல்லி போலீ​ஸார் கடந்த 18-ம் தேதி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர்.

இதைத் தொடர்ந்​து, சிஜேபி தலை​வர் அபிஜித் திப்கே உள்​ளிட்​டோர் ஜந்​தர் மந்​தரில் தொடர் உண்​ணா​விரதத்தை தொடங்​கினர். கடந்த 20-ம் தேதி சிஜேபி சார்​பில் நாடாளு​மன்​றம் நோக்கி பிரம்​மாண்ட பேரணி நடத்​தப்​பட்​டது. அப்​போது மிகப்​பெரிய அளவில் வன்​முறை வெடித்​தது. போராட்​டக்​காரர்​களைக் கலைக்க போலீ​ஸார் தடியடி நடத்​தி, கண்​ணீர் புகைக் குண்​டு​களை வீசினர். இதில் 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

டெல்​லியைத் தொடர்ந்​து, சென்​னை, மும்​பை, கொல்​கத்​தா, லக்​னோ, பெங்​களூரு, சண்​டிகர், சூரத், பாட்​னா, ஹைத​ரா​பாத் என பல்​வேறு நகரங்​களி​லும் மாணவர் அமைப்​பினர், இளைஞர்​கள் போராட்​டங்​களைத் தொடங்​கினர்.

பிரதமர் மோடி​யின் வாக்​குறுதி: இந்த சூழலில், பிரதமர் மோடி கடந்த 23-ம் தேதி இரவு சமூக வலை​தளத்​தில் ஒரு வீடியோ வெளி​யிட்​டார். அதில், “வி​னாத்​தாள் கசிவு வழக்​கு​களை விசா​ரிக்க விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும். நாடாளு​மன்​றத்​தில் புதிய மசோதா நிறைவேற்​றப்​படும்’’ என்று உறுதி அளித்​தார்.

இதைத் தொடர்ந்து, மத்​திய அமைச்​சர்​கள் ஜிதேந்​திர சிங், ஜே.பி.நட்டா ஆகியோரை சிஜேபி நிர்​வாகி​கள் நேற்று முன்​தினம் சந்​தித்​தனர். அப்​போது, ‘‘நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​துக்கு தார்​மீகப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும்’ என்பது உள்​ளிட்ட கோரிக்​கைகளை அவர்​கள் வலி​யுறுத்​தினர். இவற்றை பரிசீலிப்​ப​தாக அரசு தரப்​பில் உறுதி அளிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட 2 பக்க அறிக்​கை​யில், ‘தற்​போதைய சூழ்​நிலையை தேச​விரோத சக்​தி​கள் தங்​களுக்கு சாதக​மாகப் பயன்​படுத்​திக் கொள்​ளக் கூடாது. நமது இளைஞர்கள் தீய சுழலில் சிக்​கிக் கொள்​ளக் கூடாது என்​ப​தற்​காக பதவியை ராஜி​னாமா செய்​கிறேன்’ என்று விளக்​கம் அளித்​துள்​ளார்.

3-வது சுற்று பேச்​சு​வார்த்தை: இதைத் தொடர்ந்​து, டெல்​லி​யில் மத்​திய அமைச்​சர்​கள் நட்​டா, ஜிதேந்​திர சிங்கை சிஜேபி செய்​தித் தொடர்​பாளர்​கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் சந்​தித்து 3-வது சுற்று பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது, அவர்​களது அனைத்து கோரிக்​கைகளை​யும் மத்​திய அரசு ஏற்​றுக் கொண்​டது. பின்​னர், அனை​வரும் கூட்​டாக செய்​தி​யாளர்​களை சந்​தித்​தனர். அவர்​கள் கூறிய​தாவது:

சிஜேபி செய்​தித் தொடர்​பாளர்​கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்​கா: கடந்தசில நாட்​களாக மத்​திய அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம். நீட் வினாத்​தாள் கசிவுக்​குப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்று வலி​யுறுத்​தினோம். இதன்​படி அவர் பதவி விலகி உள்​ளார்.

‘போ​ராட்​டத்​தில் பங்​கேற்ற இளைஞர்​கள் மீதான வழக்​கு​களை வாபஸ் பெற வேண்​டும். நீட் வினாத்​தாள் கசி​வால் தற்​கொலை செய்து கொண்ட மாணவ, மாணவி​களின் குடும்​பங்​களுக்கு தலா ரூ.1 கோடி இழப்​பீடு வழங்க வேண்​டும்’ என்ற எங்​களது கோரிக்​கைகளை​யும் மத்​திய அரசு ஏற்​றுக்​கொண்டு உள்​ளது. ‘டெல்லி மட்​டுமன்றி பாஜக மற்​றும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகள் ஆளும் மாநிலங்​களி​லும் போராட்​டக்​காரர்​கள் மீதான வழக்​கு​கள் வாபஸ் பெறப்​படும். எதிர்​காலத்​தில் சிஜேபி நிர்​வாகி​கள் மீது எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​கப்​ப​டாது’ என்​றும் மத்​திய அரசு உறுதி அளித்​துள்​ளது.

குறிப்​பிட்ட கால அவகாசத்​துக்​குள் எங்​களது கோரிக்​கைகளை நிறைவேற்ற மத்​திய அரசு ஒப்​புக்​கொண்டு உள்​ளது. எனவே, போராட்​டத்தை முழு​மை​யாக வாபஸ் பெறுகிறோம். அனைத்து இளைஞர்​களும் வீடு திரும்​பு​மாறு அறி​வுறுத்​துகிறோம்.

மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்​டா: போராட்​டக்​காரர்​கள் மீதான அனைத்து வழக்​கு​களும் வாபஸ் பெறப்​படும். யார் மீதும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​ப​டாது. நீட் வினாத்​தாள் கசி​வால் தற்​கொலை செய்​து​கொண்ட மாணவ, மாணவி​களின் குடும்​பங்​களுக்​கு, மனி​தாபி​மான அடிப்​படை​யில் சட்ட விதி​களுக்கு உட்​பட்டு இழப்​பீடு வழங்​கப்​படும்.

போட்​டித் தேர்​வு, நுழைவுத் தேர்வு சீர்​திருத்​தங்​கள் தொடர்​பாக 5 அம்​சக் கோரிக்​கைகளை சிஜேபி முன்​வைத்​துள்​ளது. இவற்றை பரிசீலித்து முடிவு எடுப்​போம்.போ​ராட்​டத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்க வேண்​டும்​ என மத்​தி​ய அரசு தெரி​வித்​ததை ஏற்​று போ​ராட்​டத்​தை சிஜேபி வாபஸ்​ பெற்​றுள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

SCROLL FOR NEXT