இந்தியா

சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம்: டெல்லி மருத்துவமனை தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்​பட்​டுள்ள காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி​யின் உடல்​நிலை​யில் நல்ல முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தாக மருத்​து​வ​மனை நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

சோனியா காந்தி (79) காய்ச்​சல் காரண​மாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10:22 மணி​யள​வில் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். வானிலை​யில் ஏற்​பட்ட மாற்​றமே அவரது உடல்​நலக்​குறைவுக்கு காரணம் என்று மருத்துவ​மனை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

          

இந்​நிலை​யில் கங்கா ராம் மருத்​து​வ​மனை​யின் தலை​வர் டாக்​டர் அஜய் ஸ்வரூப் நேற்று கூறுகை​யில், “கடந்த மார்ச் 24ம் தேதி இரவு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட சோனியா காந்​திக்​கு, உடலில் பரவி​யுள்ள நோய்த்​ தொற்றை கட்​டுப்​படுத்த ஆன்ட்டி பயாடிக் மூலம் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

அந்​தச் சிகிச்​சைக்கு அவர் சிறப்​பாக ஒத்​துழைத்து வரு​கிறார். அவரது உடல்​நிலை​யில் நல்ல முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ளது. மூத்த மருத்​து​வர்​கள் குழு​வின் கண்​காணிப்​பில் அவர் இருந்து வருகிறார். அக்​குழு​வினர் அவரது உடல்​நிலையை உன்​னிப்​பாக கவனித்து வரு​கின்​றனர்” என்​றார்.

SCROLL FOR NEXT