இந்தியா

ஏழையாக இருப்பதால் அவமதிப்பதா? - டெலிவரி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் கிழிந்த ரூ.10 நோட்டை வாங்க மறுத்த டெலிவரி ஊழியரை வாடிக்​கை​யாளர் தாக்​கிய சம்​பவத்​தில், விஷம் குடித்த 23 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். ஏழையாக இருப்பதால் அவமதிப்பதா? எனக் கூறி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

டெல்​லி​யில் உள்ள ஃபிளிப்​கார்ட் மினிட்ஸ் நிறு​வனத்​தில் டெலிவரி ஊழியராகப் பணி​யாற்றி வந்த சமீர் ஹுசைன், கடந்த 4-ம் தேதி இரவு கிழக்கு டெல்​லி​யின் வினோத் நகரில் ராம்​பால் சிங் என்​பவருக்கு ஆர்​டரை வழங்​கச் சென்​றுள்​ளார்.

அப்​போது, வாடிக்கையாளர் கொடுத்த கிழிந்த ரூ.10 நோட்டை வாங்க மறுத்​துள்ளார். இதனால் வாடிக்​கை​யாளர் அவரைத் தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது. இத​னால், மனமுடைந்த சமீர் ஹுசைன் தாக்​குதல் சம்​பவம் நடந்த மறுநாளான 5-ம் தேதி விஷம் குடித்து தற்​கொலைக்கு முயன்​றார். இதையடுத்து, லால் பகதூர் சாஸ்திரி மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்​பட்ட அவர் 20-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

தற்​கொலை செய்​வதற்கு முன்​பாக, இந்​தச் சம்​பவம் குறித்து சமீர் ஹுசைன் வெளி​யிட்ட காணொலி​யில் கூறி​யிருப்​ப​தாவது: டெல்​லி​யின் வினோத் நகரில் வசிக்​கும் ராம்​பால் சிங்

என்​பவர் ஆர்​டர் செய்த ரூ.150 மதிப்​பிலான காபியை விநியோகம் செய்ய அவரது வீட்​டுக்​குச் சென்​றேன். அப்​போது, ஆர்​டருக்​கான பணத்தை கொடுத்​தார். அதில் இருந்த கிழிந்த ஒரு ரூ.10 நோட்டை மாற்​றித் தரு​மாறு கேட்டேன். நான் அவரிடம் மரியாதையாக, ‘மாமா, தய​வுசெய்து இந்த நோட்டை மாற்​றித் தாருங்​கள்’ என்று கூறினேன். ஆனால், அவர் ‘என்​னிடம் இது​தான் இருக்கிறது. வேண்​டு​மானால் வாங்​கிக்​கொள்;

இல்லை​யென்​றால் இங்​கிருந்து சென்​று​விடு’ என்று கூறி என்னை மூன்று முறை கன்​னத்​தில் அறைந்தார். நான் பதிலுக்கு எது​வும் செய்​ய​வில்லை. இருப்​பினும், எனது ஏழ்மை நிலை​யைச் சுட்​டிக்​காட்டி அவ​மதித்​தது மிகுந்த மனவேதனையை ஏற்​படுத்​தி​யது.

சுய​மாக உழைத்​துப் பணம் சம்​பாதிக்க வேண்​டும் என்​ப​தால் தந்​தையிடம் ஒருபோதும் பணம் கேட்​டதில்லை. என்​னிடம் பணம் இல்​லாததால் தனக்கு நீதி கிடைக்​காது என அஞ்​சுகிறேன். நடுரோட்​டில் எனது சுயமரியாதை ஏற்​க​னவே சிதைக்​கப்​பட்​டுவிட்​டது. அத​னால், நான் தற்​கொலை செய்து​கொள்​ளப் போகிறேன்.

ஏழையாக இருப்​ப​தால்​தான் வாழ்​நாள் முழு​வதும் அவ​மதிப்​பு​களைச் சந்​திக்க வேண்​டியுள்​ளது. நான் பணி​யாற்​றிய நிறு​வனத்​தில் இருந்​தும் யாரும் எனக்கு உதவ முன்​வர​வில்லை” என கூறியுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT